களவாடப்படும் கன்னியாகுமரி கண்டுகொள்ளுமா தமிழகம்..! சாகர்மாலாவின் தொடக்கமா..?

0 431

சாகர் மாலா திட்டத்தின் ஒரு பகுதியான விழிஞ்சம் அதானி துறைமுகத்திற்கு கப்பல் மூலம் குமரி மாவட்டத்தின் மலைகளை உடைத்து கற்களை எடுத்து செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகம் வழியாக கொண்டு செல்வது தொடர்பாக மீனவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அனைவரும் தீவிரமாக செயல்பட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். கலந்துரையாடலை முறியடிப்போம்.

இயற்கையின் எழிலை நாம் பலரும் வியப்பதும் அளவு கடந்து நேசிப்பதும் இயல்பு.

ஏனெனில் இயற்கை அத்தனை வியப்பிற்குரியதும் போற்றுதலுக்கும் உரிய சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆனால், அதன் மேன்மைகளை நாம் மட்டும் அனுபவித்தால் போதும், எதிர்கால சந்ததியினர் பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை என்றெண்ணினோமானால் நாம் சுயநலவாதிகள்.

சுயநலவாதிகளாய் இல்லாமல் பரந்த மனப்பான்மையுடன் நமது எதிர்கால சந்ததியிடம் இருந்து திருடி அனுபவிக்கும் இயற்கை வளங்களை கொஞ்சம் மனசாட்சியுடன் கையாள்வோம்.

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்
மேற்தொடர்ச்சிமலையின் வரலாறு
மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது.

உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும்.

இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.