நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்துள்ளதா.? வதந்தியா..? உண்மையா..?.

0 610

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுகிறத..?ஜெம் நிறுவனம்!

 

தமிழகத்தின், நெடுவாசலில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குத்தகை ஜெம் லெபாலட்டரிஸ் என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசால் மாற்றப்பட்டது. கடந்த வருடம் மார்ச் மாதம், இந்த ஒப்பந்தம் முடிவானது. இதையடுத்து ஜெம் நிறுவனம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை துவக்க ஆயத்தமானது. ஆனால், சுற்றுச்சூழல் சீர்கேடு கருதி, பொதுமக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து பெரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

பொதுமக்கள் போராட்டத்தையடுத்து, ஜெம் நிறுவனத்திற்கு தமிழக அரசு குத்தகையை மாற்றித்தரவில்லை. ஜெம் நிறுவனம் தமிழக அரசுக்கு் இதுவரை10 கடிதங்கள் எழுதியும், மத்திய அரசு 3 கடிதங்கள் எழுதி கோரிக்கைவிடுத்தும், தமிழக மக்கள் தொடர் எதிர்ப்பால் அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து, நெடுவாசலுக்கு பதில் வேறு இடம் ஒதுக்குமாறு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்திற்கு ஜெம் நிறுவனம் கோரிக்கைவிடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தாமதமாவதால் இழப்பு ஏற்படுவதால் வேறு இடத்தை வழங்க ஜெம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனவே, விரைவில் மத்திய அரசு வேறு இடத்தை ஒதுக்கினால், நெடுவாசலில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ஜெம் கைவிடும் என தெரிகிறது. இது பொதுமக்களின் ஒற்றுமையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.