களிமண் கொண்டு கரிகாலன் கட்டிய கல்லணையின் பின் புதைந்திருக்கும் வரலாற்று உண்மைகள்!!!

0 743

  மேல உள்ள மாமன்னர் கரிகால சோழரின் கற்படிமம் காஞ்சிபுரம் ஏகம்பெரேஸ்வரர் கோவிலின் முதல் பிரகார வாசலுக்கு இடது புறம் நிறுவப்பட்டுள்ளது

இதன் காலம் அறிய இயலவில்லை.வேறு எங்கும் இதனைப்போலகரிகாலசோழரின் கற்படிமம் கிடைக்கவில்லை .இக்கற்படிமம் தமிழ் கூறும் நல்லுலகின் மாமன்னர் பெருவளத்தான், திருமாவளவன் ,கரிகால சோழரின் உண்மை உருவாக இருக்கும்.

கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான்.

இவன் தந்தையின் பெயர்இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.

கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன,எனக்கூறி அவரது வரலாற்றை மறைக்க முயல்கின்றனர் பல வரலாற்று ஆசிரியர்கள்,அனால் உண்மைச்சுவடுகள் அழிவதில்லை .

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதை வருணித்துள்ளனர்.

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு பின் சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

தெலுங்குச் சோட அரசர்கள் எல்லோரும் தங்களைச் சோடர்கள் எனச் சொல்லிக் கொண்டார்கள். இவர்கள் ரேநாட்டுச் சோழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர்
மைசூர் தலைக்காடு பகுதியை ஆண்ட கங்கர்கள் தம்மை விருத்தராஜா முத்தரைசர் என்று அழைத்துக் கொண்டார்கள்.

இவர்கள் தமிழ் முதுகுடிமக்கள் எனக் குறிப்பதற்கே தம்மை முதுஅரசர்-முத்தரசர் என்று கூறிக்கொண்டனர் எனக் கண்டோம் .கங்க அரசர்களில் கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட துர்விநீதன் என்ற சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் “உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்” என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு “உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான”, தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன்.

அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.
கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீயிலிருந்து தப்பினான். அப்பொழுது அவனது காலைத் தீ சுட்டதால் கரிகாலன் எனப் பெயர் பெற்றான் என்று பண்டைய தமிழ் வரலாறு கூறும். இத் தமிழ் மரபைக் கங்கர்களது செப்பேடுகள் உறுதி செய்கின்றன.

கங்க அரசன் துர்விநீதனுக்கு மகன் வயிற்று மகன் (பெயரன்) ஸ்ரீ விக்ரமன் என்று ஒருவன் இருந்தான். அவனும் பின்னர் கங்க அரியணை ஏறினான். அவனும் சோழ இளவரசியை மணந்தான்.

அவளைக் கூறும்போது கங்கர் செப்பேடு “காவிரிக்குக் கரை கட்டிய கரிகால சோழனின் குலத்து உதித்தவள்” என்று “காரித காவேரீதீர கரிகால சோழ குலவம்ச சோழ நிருபதி புத்ரீ” எனப் புகழ்கிறது. கங்கர்கள் தம்மைக் கரிகால சோழ குலப் பெண் வழி வந்தவர்கள் என்று கூறிப் பெருமைப்படுகிறார்கள்.

கல்லணை

உலகில் கட்டப்பட்ட பழமையான நீர்பாசன அணைகளுள்
ஒன்றுகல்லணை. இந்த அணை சுமார் 2000 ஆண்டுகளுக்கு
முன் கரிகாலச் சோழன்என்னும் மன்னனால் காவேரி
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பெரியபாறை
கற்களைக் கொண்டு மிக வலுவாக கட்டப்பட்டுள்ளது இந்த
அணை.

இந்த அணை கட்டப்பட்டதன் முக்கிய நோக்கம் காவேரி
அணையின்தண்ணீரை தடுத்து, விவசாய நிலங்கள்
நீர்ப்பாசன வசதிபெறச் செய்வது ஆகும்.இத்தகைய
திட்டமிடலுடன் கட்டப்பட்ட இந்த அணை இன்றளவும்
வலுவானநிலையில் உள்ளது. 1080 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டு
இவ்வணைகட்டப்பட்டது.

கல்லணையின் சிறப்புக்கு மற்றுமொரு காரணம்
இவ்வணை கட்டபயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்
ஆகும். பெரும் பாறைகளைக் கொண்டுவந்துஒன்றன்
மீது மற்றொன்றை போட்டு அவற்றை தரையில்
ஆழமாக ஊன்றச்செய்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் கட்டப்படும் பல பாசன அணை
கட்டுமானங்களுக்கு,கல்லணை ஒரு சிறந்த மாதிரியாக
விளங்குகிறது. ஆங்கிலேய பொறியாளரானசர்.
ஆர்தர் காட்டன் கொள்ளிடம் அணையைக் கட்டுவதற்கு
முன் இந்தகல்லணையை நன்றாக ஆராய்ந்த பிறகே கட்டினார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.