அதிசிய மரங்கள் அழிக்க துடிக்கும் அரசு..! பணமா..? பிணமா..?

0 587

மேலே நீங்கள் படத்தில் காணும் மரங்களெல்லாம் இன்னும் சில வாரங்களில் வெட்டி அளிக்கப்பட விருக்கின்றன

, காரணம் சாலை விரிவாக்கம் என்பதே,
சிவகங்கை (மாவட்டம்) காரைக்குடி முதல் நத்தம் வரையிலான சாலை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்து ரூ 177 கோடி ஒதுக்கியுள்ளதாக பத்திரிக்கை செய்தி ,உண்மையில் இந்த சாலை விரிவாக்கம் செய்யவேண்டிய அவசியம் இல்லை,

சாலைகள் அகலமாகவே உள்ளன, இந்த சாலை உள்ளபகுதியில் தொழிற் சாலைகளும் இல்லை, மக்கள் பயனுக்காக மட்டுமே உள்ளது.

சரி மக்கள் யாரும் விரிவாக்கம் செய்ய சொல்லி கேட்டுக்கொண்டார்களா என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை, அப்புறம் யாருக்காக இந்த விரிவாக்கம் அரசியல்வாதிகள் ஒபந்தக்காரர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் பலன் பெருவதற்காக மட்டுமே!

உண்மையில் ஒவ்வொரு கிராமும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது மக்கள் வேண்டுவதெல்லாம், குடிதண்ணீர், மின்சாரம், சாக்கடை ஓடுபாதை, கிராம உட்புற சாலைகள், மருத்துவம் ,கல்வி இதை அரசு செய்து கொடுத்தாலே போதும் மக்கள் மகிழ்ச்சியுருவார்கள் நண்பர்களே..

படத்தில் உள்ள மரங்கள் உள்ள இடம்: திருப்புத்தூர் முதல் காரையூர்வரை மட்டும் தான் ,மேலும் பல மரங்கள் உள்ளன….

அதிகமாக பகிருங்கள் ஒட்டு மொத்த ஊடகமும் இதை அம்பலப்படுத்த வேண்டும் என தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்..

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
பாவேந்தர் பசுமைப்புரட்சி அறக்கட்டளை

You might also like

Leave A Reply

Your email address will not be published.