மீண்டும் விஜய் டிவி பிரபலத்தை தங்கையாக்கும் சிவா.? இந்த முறை யார் தெரியுமா.? வெளியிட்ட புகைப்படம் உள்ளே..!!
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் தான் மாவீரன். இந்த திரைப்படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் என்பவர்
இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சரிதா உள்ளிட்ட
பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். இந்த திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், ஜூலை 14 ஆம் தேதி அன்று இந்த திரைப்படம்
வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இதற்கு முன்பாக நடித்த ஒரு திரைப்படத்தில் இவருடன் நடிகை சிவாங்கி நடித்திருப்பார். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் சிவாவுக்கு தங்கையாக விஜய் டிவியின்
ஒலிபரப்பு செய்ய பட்டு வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக இருந்து வருபவர் தான் மோனிஷா. இவர் தற்போது நடிகர் சிவக்கு தங்கையாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது…