மாவிலை நீரை குடிப்பதால் என்னென்னெ வியாதிகள் நீங்கும் என தெரியுமா?

0 377

விழாக்களின் உற்சாகத்தின் ஒரு பகுதியாக இந்தத் தோரணங்கள் கட்டப்படுவதாகத் தோன்றினாலும், அதன் மெய் நோக்கம், இந்தக் கொண்டாட்டங்களில் யாராவது ஒருவருக்கு ஏற்படும் சுவாச பாதிப்புகள், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவே, அதிகம் மக்கள் கூடும் அவ்விடங்களில் மாவிலை தோரணங்கள் கட்டி வைத்தனர்.

மாவிலைகள் சிறந்த கிருமி நாசினியாகவும், வியாதி எதிர்ப்பு சக்தி மிக்க மூலிகையாகவும் பயன் தருகின்றன.

மாவிலைகள் பொதுவாக, சிறுநீரை அதிக அளவில் வெளியேற்றக் கூடியது, வீக்கங்கள் கட்டிகள் போன்றவற்றை கரைக்க வல்லது, வாய்ப்புண், வயிற்றுப்புண் இவற்றை போக்க வல்லது. மாவிலைகளில் புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின் A, B மற்றும் C நிரம்பியிருக்கிறது. சிறந்த கிருமி நாசினி மற்றும் வியாதி எதிர்ப்பு சக்தி மிக்கது.

மாவிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அத்துடன் சிறிது தேன் கலந்து பருகி வர, இரத்தக் குழாய் அடைப்புகளால் உண்டாகும் வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு சுருட்டல் வியாதிகளை போக்கி, இரத்த அழுத்த குறைபாடுகளை சரி செய்யக் கூடியது. இரத்த அணுக்களை வலுவூட்டி, இரத்த ஓட்டத்தை சீராக்கும் வல்லமை மிக்கது இந்த மாவிலைத் தேநீர்.

மேலும், உடலில் தேங்கியிருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி, மனிதர்களின் பரம்பரைத் தன்மையை, செயல்திறனை பாதுகாக்கும் உடலின் முக்கிய அணுக்களான DNA தொகுப்பை, இந்த மாவிலைத் தேநீர், பாதிப்புகளில் இருந்து காக்கும் திறன் மிக்கது. இரத்த அழுத்த பாதிப்புகள் இல்லா விட்டாலும், மாவிலைத் தேநீர் அவ்வப்போது பருகி வர, உடலின் நச்சுக்கள் வெளியேறி, உடல் நலமாகும்.

மாங்கொழுந்து இலைகளை சற்று சூட்டில் வதக்கி எடுத்து, தேன் கலந்த தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் அந்த தேன்மா நீரைப் பருகி வர, சுவாச பாதிப்புகளால் ஏற்பட்ட தொண்டைக் கட்டு, பேச முடியாமல் குரல் கம்முவது போன்ற பாதிப்புகள் விலகும்.

மாவிலைப் பொடியைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர, ஈறுகள் பலமடைந்து, பற்கள் உறுதியாகும். வாய்ப்புண், வாய் துர்நாற்றம் விலகும். மாவிலையை நெருப்பில் இட்டு அந்த சாம்பலை, வெண்ணையில் குழைத்து தீக்காயங்களின் மேல் தடவி வர, அவை விரைவில் ஆறும்.

மாவிலைச் சாற்றுடன், பொன்னாங்கண்ணி சாற்றை சேர்த்து, இவற்றை தேங்காய் எண்ணையில் கலந்து தலைக்கு தடவி வர, தலைமுடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் விலகி, இள நரை மாறி, தலைமுடி கருகருவென வளரும்.

மாவிலைகளை நெருப்பில் இட்டு அந்தப் புகையை சுவாசித்து வர, விக்கல் பாதிப்புகள் நின்று விடும். மற்ற சுவாச பாதிப்புகளையும் சரி செய்யும்.மாவிலைகளை தண்ணீரில் நன்கு காய்ச்சி, அதை தினமும் பருகி வர, மாலைக் கண் போன்ற கண் பார்வைக் குறைபாடுகள் அகலும். சிறிது மாவிலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த சாற்றை வேதனை கொடுக்கும் காது வலி வந்த காதில், சில துளிகள் விட, காது வலிகள் விலகி ஓடி விடும்.

மன ரீதியான பாதிப்புகளுக்கு சிறந்த நிவாரணம் அளிக்க வல்லவை, மாவிலைகள். சிறிது மாவிலைகளை குளிக்கும் நீரில் சற்று நேரம் ஊறவைத்தபின் குளித்துவர, உடல் சோர்வு மற்றும் மன வாட்டங்கள் நீங்கி, புத்துணர்வு பெறலாம்.

மா மரப்பட்டைகளில் வடியும் பிசினை, பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவி வர, பாத வெடிப்புகள் யாவும் மறைந்து விடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.