வைகை நதி சாவின் விளிம்பில் – அடுத்த கூவமாக மாற்றப்படுகிறது..!

0 167

‌”வைகை நதி தேனி மாவட்டத்தில் உருவாகி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் விழியாகப் பாய்ந்தோடுகிறது. வற்றாத வைகை என்று நம் முன்னோர்கள் கூறி கேட்டதுண்டு, ஆனால் பருவமாற்றத்தின் காரணமாகக் கடந்த சில வருடமாக அடிக்கடி வைகை வற்றிப்போவதுண்டு.

இவ்வாண்டு நல்ல மழையின் காரணமாக வைகை நதி பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. நீர் வரத்தின் மகிழ்ச்சியைக் கொண்டாட முடியவில்லை காரணம் ” வைகை நதியில் சோப்பு நுரை ” மிக அதிகமாகப் பொங்கி நதியையே மறைத்துவிட்டது, நதி விசமாக மாறிவிட்டது.

இதற்கு யார் காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால் இரண்டு விடயங்கள் தெரிந்தன

நதிப் படுகையில் இருக்கும் 100 ற்றுக் கணக்கான கார்பரேட் தொழிற்சாலைகள்
கார்பரேட்களுக்கு ஜால்ரா அடிக்கும் அரசு அதிகாரிகள்

இந்திய சட்டப்படி சுத்திகரிக்கப் படாத கழிவு நீரை ஆற்றில் விடக்குடாது. ஆனால் கடந்த சில வருடங்களாக வைகை ஆற்றில் நீர் இல்லதைப் பயன்படுத்தி தொழிற்சாலைகள் சுத்திகரிக்க படாத கழிவு நீரை ஆற்றில் விட்டன.

இதை எந்த அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை காரணம் அதிகாரிகளுக்குச் சேர வேண்டியது தொழிற்சாலை அதிபர்களிடமிருந்து சென்று கொண்டிருந்தது.

தற்போது மழையின் காரணமாக வைகை நதியில் நீர் வரும் பொழுது ஏற்கனவே நதியில் இருந்த கழிவு நீருடன் கலந்து சோப்பு நுரை பொங்கி நதியையே மறைத்துவிட்டது.

ஆக வற்றாத வைகையை அடுத்த கூவமாக மாற்றி தொழிற்சாலைகளின் கழிவு வடிகளாக மாற்றுவதே இவர்களின் திட்டம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.