ஸ்டெர்லைட் sterlite உண்மை என்ன..!

0 299

இன்று எல்லோராலும் பேசப்படும் இந்த ஸ்டெர்லைட் கம்பெனியைப் பற்றி உங்களுக்கு முழுவதும் தெரியவில்லை என்றால் அதனைப் பற்றிய ஒரு சிறிய கட்டுரை தான் இது.

1994ல் செம்பு (copper) தயாரிப்பிற்காகவே உருவாக்கப்பட்டது தான் இந்த ஸ்டெர்லைட். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் காப்பர் பயன்படுத்தப்படாத பொருட்களை காண்பதே அரிது

. காப்பர் நம்முள் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. அவ்வாறு இருக்க ஸ்டெர்லைட்டை எதிர்ப்பது சரியா..? முழுவதையும் படித்துவிட்டு நீங்களே கூறுங்கள். இந்த ஸ்டெர்லைட் தயாரிப்பதற்கு copper pyrite எனப்படும் பாறையிலிருந்து தான் இந்த காப்பரை பிரித்து எடுக்கிறோம். இன்று இருக்கும் நமது அறிவியல் முறையில் இந்த காப்பரை பிரித்து எடுக்கும்போது sulpher di oxide , arsenic, cadmium போன்ற பல நச்சு வாயுக்கள் வெளியேறும். அந்த நச்சு வாயுக்களை கொண்டு துணைப் பொருள்களாக (by products) கந்தக அமிலம்(sulphuric acid),பாஸ்போரிக் அமிலம்(phosphoric acid), ferro sand போன்ற பொருட்களையும் உருவாக்கி அதனையும் டன் கணக்கில் விற்பனை செய்கிறார்கள்.

இத்தகைய பொருட்கள் தயாரிப்பதற்கு அதிகளவிலான தண்ணீர் தேவைப்படும். ஸ்டெர்லைட் வெகு ஜனங்கள் வாழும் ஒரு ஊருக்கு நடுவே அமைந்துள்ளது. இது அங்கிருக்கும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் முழுவதையும் தானே எடுத்துக் கொண்டது. இதனால் அங்கு இருக்கும் விவசாயம் அனைத்தும் பாதிக்கப்பட்டது, மேலும் இது போதாதென்று அதில் ஏற்படும் கழிவுகளும் அங்கு கொட்டப்பட்டு அங்கு வாழும் மக்களுக்கு பெருமளவில் நோய்களை உண்டாக்கும் சூழலையையும் அது ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மனிதர்கள் வசிக்கும் இடத்திலிருந்து 25 கி.மீ (environmentally sensitive zone) தாண்டியே இப்படிப்பட்ட கம்பெனிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே விதி. ஆனால் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பரப்பளவிற்கு உள்ளேயே இது உருவாக்கப்பட்டது ஆயினும் இதனை தடுப்பதற்கு ஆரம்பத்தில் எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. 2004ல் கந்தக அமில(sulphuric acid) நச்சு வாயுக்கள் கலக்க ஆரம்பித்ததில் அங்கு வாழும் மக்களுக்கு தோல் அரிப்பு , கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் உருவாக ஆரம்பித்தது. இதனால் அன்றைய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் high courtல் உத்தரவு வாங்கி இதனை மூடவேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் செய்த மேல் முறையீட்டில் supreme court கொடுத்த உத்தரவு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “இந்த தவறுக்காக இதனை மூடக்கூடாது என்றும், இனிமேல் இப்படி தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் கூறி அபராதம் விதித்து மீண்டும் இதனை நடைமுறை படுத்துவதற்கு உத்தரவிட்டது. இதன் மூலம் மீண்டும் ஸ்டெர்லைட் தனது செங்கோலை ஊன்ற ஆரம்பித்தது. இது வரை 5000 மேற்பட்ட மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர், மேலும் மீதி மக்களின் வாழ்வாதாரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. செழுமையான விவசாயம் பார்த்த இந்த பூமியில் நிலத்தடி நீரைக் கூட குடிக்க முடியாத நிலையில் நம் மக்கள் உள்ளனர். 80 micrograms per cubic metre மட்டும் இருக்க அனுமதிக்கப் பட்ட sulphur dioxide 13000 micrograms per cubic metre இருக்கிறது. இப்படி பட்ட ஸ்டெர்லைட் இங்கு அவசியமா.? என்பதை என்னிடம் கேட்காதீர்கள்.

ஆனால் தனி ஒருவனின் சுயலாபத்திற்காக தொழிற்சாலையில் நடந்த நச்சு வாயுக் கசிவினால் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை போபாலில் கண்ட நமக்கு, இன்னொரு போபால் பேரழிவை தாங்கும் சக்தி கிடையாது.

நன்றி
ழகரம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.