கடைசி தமிழன் வாழும் வரை தமிழ் வாழும் ஆனால்..! கள் வாழுமா..?

0 255

பெயர் : ரஞ்சித்
வயது : 14 படிப்பது : 9 வகுப்பு
ஊர் : விழுப்புரம்

படித்து கொண்டே பனை தொழில் செய்யும் ரஞ்சித் உழைப்பு உயர்வு தரும்.
படிப்பை நிறுத்தாதிர்..

வாழ்வில் வெற்றியடைய வாழ்த்துகள் தம்பி …..

மதுபானங்களின் வருகைக்குப் பின் கள் குடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டார்கள். கள்ளும் ஒரு மதுபான வகைதான் என்றாலும் இது பழந்தமிழரின் பானம் ஆகும். மனித வரலாற்றில் இனக்குழுக்கள் ஆண், பெண் பேதம் பார்க்காமல் பல்வேறு போதை பானங்களை பருகியுள்ளனர் என்பதை நமது வரலாறும், புராணங்களுமே எடுத்துரைக்கின்றன.

ஔவையே குடித்தார்:
இப்புவிப் பரப்பில் தமிழ் மொழியை பாடல்களால் வளர்த்த ஔவையார், அதியமானை ஒரு பாடலில் புகழ்ந்து எழுதும்போது, தனக்கு அதியமான் கள் பருகக் கொடுப்பான் என்றும், கள்ளை குடித்துவிட்டு தன்னிடம் பாடல் பாடச் சொல்லி அதை கேட்டு ரசிப்பான் என்றும் குறிப்பிடுகிறார்.

பலமரக் கள்:
தென்னை மரத்தில் மட்டுமல்ல, பனை மரம், அத்தி மரம், அரச மரம், ஈச்ச மரம், வேப்பிலை மரம் என பல வகை மரங்களில் இருந்தும் கூட கள் இறக்கப்பட்டுள்ளது என்பதை சங்க இலக்கியங்கள் உரைக்கின்றன. இவ்வளவு ஏன், சப்பாத்திக்கள்ளியில் இருந்தும் கூட கள் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த இன மரங்கள் பலவும் சர்வதேச வணிகத்தின் சூழ்ச்சியால் அழிக்கப்பட்டுள்ளன என்பதை உணர முடிகிறது அல்லவா? அவர்களிடம் இருந்து தப்பித்தது தென்னையும், வேம்பும் மட்டுமே.

சித்த மருத்துவம்:
தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கள் முக்கியத்துவம் பெறுகிறது. கள்ளின் மருத்துவப் பயன்களை தெளிவாக பதிவு செய்து சென்றுள்ளனர் சித்தர்கள். சித்தர் பாடல்களின் பல இடங்களில் கள்ளின் மருத்துவ மகத்துவங்களை அறிந்துகொள்ள முடிகிறது. பனை மரத்து கள்ளால் ஆண்களுக்கு உடல் வலிமையையும், விந்து சக்தியும் அதிகரிக்கும் என அகத்தியர் குணப்பாடம் கூறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.