சோழர்களிடம் கப்பற்படை இருந்ததா..? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..!

0 522

தென்னிந்தியாவில் தொடங்கி, மேற்கிந்தியா வழியாக தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து, தற்போதைய பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், கடாரம், இலங்கை போன்ற நாடுகளை தனது கப்பற்படையைக் கொண்டு வெற்றி வாகை சூடியவர்கள் சோழ பேரரசர்கள்.

இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழன் போன்றவர்கள் சோழ பேரரசின் முக்கிய அரசர்களாக குறிப்பிடப்படுகின்றனர்.

நாவாய் : பண்டைய தமிழர் கப்பற்படை “நாவாய்” என்றழைக்கப்பட்டது. அப்பெயர்தான் ஆங்கிலத்தில் “நேவி”(Navy) என மாற்றப்பட்டு அழைக்கப்படுகிறது.

கப்பற்படை வரலாறு : ஆயிரம் ஆண்டுகள் கப்பற்படை வைத்து ராசாங்கம் நடத்திய பெருமை உலகிலேயே சோழரகளை மட்டுமே சேரும்.

கனம் : கப்பற்படையில் நிறைய போர் வீரர்களை கொண்டு குழு ஒன்று பிரிக்கப்பட்டிருக்கும், அவர்களை “கனம்” என்று குறிப்பிடுவர். இக்குழுவினை தலைமை தாங்கியவரை “கனாதிபதி” என்று அழைக்கப்பட்டிருக்கின்றார்.

கண்ணி : தமிழில் “கண்ணி” என்பதற்கு, “பொறி” என்றொரு பொருளிருக்கிறது. எதிரிகளை பொறிவைத்துப் பிடிக்கும் கப்பற்படை வீரர்களை, “கண்ணி” என்று அழைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் சிறப்பு பணியில் நியமிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு தலைமைவகிப்பவர் “கலபதி” என்று அழைக்கப்படுவார்.

மண்டலம் : கப்பற்படையின் பாதி நிரந்திர போர் குழுவை, மண்டலமென்று குறிப்பிடுகிறார்கள். இவர்களை தலைமை வகிக்க மண்டலாதிபதி என்பவர் நியமிக்கபட்டிருப்பார். இப்பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனித் தனியாகவும், குழுவாகவும் சென்று போர் புரிவதில் வல்லமை பெற்றவர்களாக இருப்பர்.

மூன்று “மண்டலம்” குழுவை உள்ளடக்கியிருக்கும் குழுவானது “கனம்” என கூறப்பட்டிருக்கிறது.

அணி : பெரிய போர்களில் ஈடுபட மட்டுமே உபயோகப்படுத்தப்படும் குழுவை “அணி” என்கின்றனர். ஒரு அணியில் மூன்று “கனம்” குழுக்களை உள்ளடக்கி இருக்கும். இதன் தலைமையினை “அணிபதி” என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

அதிபதி : இந்த அனைத்து குழுக்களையும் தலைமை தாங்குபவர்தான் “அதிபதி”. இவரது கட்டளைக்கு இணங்க அனைத்து குழுக்களும் இயங்கும். இளவரசர் இவரினை நிர்வகிப்பார்.

இப்பெரும் கப்பற்படையை வைத்துதான், இந்தோனேசினா, ஜாவா, மாலத்தீவு, சிங்கப்பூர், இலங்கை, ஆங்கோர், கடாரம் போன்ற பல பகுதிகளை வென்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.