விரை வீக்கம், விதை பை வலி போன்ற நோய்களை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு நோயுடனே வாழ்கின்றனர் பலர்..!

0 4,194

அநேகமாக வயதாகிவிட்டால் நிறைய ஆண்களுக்கு விரை வீக்கம் வந்துவிடும். அப்படி வந்துவிட்டால் எங்கே வெளியே சொன்னால் அவமானம் என்று சொல்ல கூச்சபடுவார்கள் மற்றும் மருத்துவமும் செய்துகொள்ள மாட்டார்கள்.

விரை வீக்கம், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களுக்கு தமிழகத்தின் பெருபாலான பேருந்து நிறுத்தங்களில் துண்டு பிரசுரம்(பிட் நோட்டீஸ்) ஒட்டியிருப்பதை பார்த்திருப்பீர்கள்.

அந்த துண்டு பிரசுரத்திலுள்ள முகவரிக்கு போனால் நோய் சரியாகுமோ இல்லை பையிலுள்ள பணத்தை கரப்பார்களோ என்ற சந்தேகத்தில் விரை வீக்கம் உள்ளவர்கள் அங்கே செல்வது கிடையாது.

அப்படிப்பட்டவர்களின் மன நிலையை கருத்தில் கொண்டு இந்த இயற்கை மருத்துவத்தை பதிவு செய்கிறோம்.

இந்த எளிய மூலிகை மருத்துவத்தை உங்கள் வீட்டிலேயே குறைந்த செலவில் செய்து பயன் பெறலாம். மருத்துவத்தின் மூலம் குணமடைந்தால் உங்களைப்போல் அவதிபடுவோர்களுக்கும் இந்த மருத்துவத்தை பகிர்ந்துகொள்ளுங்கள், பரிந்துரை செய்யுங்கள்.

விரை வீக்கம் போக்கும் கழற்சிக்காய் தைலம்:

தேவையானவை: கழற்சிக்காய் போடி, விளக்கெண்ணை, மிளகு

மருந்து தயாரிக்கும் முறை: அடுப்பில் வாணலியை வைத்து
விளக்கெண்ணை ஊற்றி அதில் ஒரு சிறு கரண்டி அளவு கலச்சிக்காய் பொடியை போட்டு நன்றாக மிக்ஸ் செய்துகொண்டே எண்ணெய்யை காய்ச்ச வேண்டும்.

சிறிது நேரமான பிறகு அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறியவுடன் கழற்சிக்காய் தைலத்தை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துகொண்டு விரை வீக்கம் உள்ள பகுதிகளில் மேல் பூச்சு மருந்தாக பூசி வரவேண்டும்.

அதே வேளையில் கழற்சிக்காய் பொடியுடன் மிளகு சேர்த்து(ஒரு கலச்சிகாய் அளவு பொடிக்கு 5 மிளகு என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும், அதாவது 100க்ம் கழற்சிக்காய் பொடிக்கு 20 முதல் 25 கிராம் மிளகு போடி சேர்க்கவேண்டும்) ஒரு டீஸ்பூன் அளவிற்கு 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், விதை பை வலி போன்றவை நிச்சயம் தீரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.