கர்ப்பம் அடைவதை தடுக்கும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, எச்சரிக்கையாக இருக்கவும்

0 823

தற்போது ஒரு குழந்தையை பெற்றெடுக்கவே பலர் பல மருத்துவரை சந்தித்து, கருத்தரிக்க மருந்துகளை எடுத்து சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான்.

ஆனால் அத்தகைய மருந்துகளில் உதவியின்றியும் இக்காலத்தில் எளிமையாக கருத்தரிக்க முடியும். அதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்..

கருவளத்தை அதிகரிக்க, தம்பதிகள் இருவரும் நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொண்டு வர வேண்டும். அதிலும் பழங்கள், காய்கறிகள், கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன் நிறைந்த உணவுகள் என அனைத்தையும், அத்துடன் வாரத்திற்கு இரண்டு முறை மீனையும் உணவில் சேர்த்து வர வேண்டும்.

தற்போது மன அழுத்தம் தான் பலரையும் வாட்டி வதைக்கிறது. மேலும் மன அழுத்தமே கருத்தரிக்க பெரிதும் தடையை ஏற்படுத்துகிறது. எனவே மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் யோகா செய்து வர வேண்டும். இதனால் மனம் அமைதி அடைவதுடன், விரைவில் கருத்தரிக்கவும் முடியும்.

உடலில் வைட்டமின்கள் மற்றும் ஃபோலிக் ஆசிட் போதிய அளவில் இல்லாவிட்டாலும், கருத்தரிக்க முடியாமல் போகும். எனவே வைட்டமின்கள் மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுப் பொருட்களை தினமும் எடுத்து வாருங்கள்.

புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் தம்பதிகளுக்கு இருந்தால், உடனே அவற்றை நிறுத்த வேண்டும். மேலும் காப்ஃபைன் நிறைந்த உணவுப் பொருட்களான காபி, டீ போன்றவற்றை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று தான் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது. இப்படி ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், உடலில் பல பிரச்சனைகள் ஆரம்பமாகி, பின் கருப்பையில் சிசு தங்குவதில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

எனவே கருத்தரிக்க நினைக்கும் முன், தம்பதிகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையான நல்ல உணவுகளை வீட்டிலேயே சமைத்து உண்பது, உடற்பயிற்சியில் தினமும் ஈடுபடுவது என மேற்கொண்டு வர வேண்டும்.

ந. சண்முகசூரியன்
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் ,,
+91 9344465679,

You might also like

Leave A Reply

Your email address will not be published.