உலக அளவில் புகழ்பெற்ற தமிழர் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருபவர் யார்? ஏன்?

0 595

Qura பகிர்வு

எனக்கு உலகில் புகழ்பெற்ற தமிழர் என்றவுடன் என் நினைவுக்கு பலர் வருவார்கள். அதிலும் குறிப்பாக

தொல்காப்பியர், திருவள்ளுவர், ஒளவையார், நம்மாழ்வார், கம்பர்.

தென்னாடுடைய சிவன், அருள்மொழிச்சோழன், அரச அரசேந்திர சோழன், பாரி, வேலுப்பிள்ளை பிரபாகரன்.

இப்படி பலர் என் நினைவில் வருவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் என் உள்ளத்தில் பதிந்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

தமிழன் யார் என்பதை உலகம் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

ஒரு நாட்டின் வரலாற்றை மாத்திரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்.

ஐரோப்பாவில் பல தமிழ் பள்ளிக்கூடங்கள், கோவில்கள், வானொலி நிலையங்கள், தொலைக்காட்சி நிலையங்கள் பல உருவாக்கிபிரபாகரன் தலைமைக்கு கீழ் இயக்கிவந்தார்கள்.

தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர்என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர்.

சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான்.

இனித் தமிழர் வரலாறு தூங்கும் நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.

இணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர் தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர்.

பலரை வரலாறு படைக்கின்றது. ஆனால் ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள். அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் தமிழனின் ஊழி தோன்றும் அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்.

அன்று தொட்டு இன்று வரை தமிழரின் போரட்டம் அற வழியைத் தழுவி நிற்கின்றது. அமைதி வழியிலும் சரி, போர்க்காலங்களிலும் சரி தமிழர் வரித்துக் கொண்ட போராட்டம் அறத்தின் நியமத்தில் நெறிப்பட்டு நிற்கின்றது அவர் நடத்திய ஈழவிடுதலைப் போர் நேர்மையின் அடிப்படையிலானது. அது தமிழர்களின் உயிர்ப்பலத்தில் இருந்து வருகிறது.

சிங்களவர்கள் உண்மையான புத்த மதத்தினராக இருந்திருந்தால், தமிழீழ விடுதலைப் போருக்கான கட்டாயம் இருந்திராது. சமாதானப் பேச்சென்றாலும் சரி, போர் என்றாலும் சரி, சிங்கள இனவாதிகள் நேர்மை, மதிப்பு, கருணை அற்றவர்களாக வெளிப்படுகிறார்கள். சிங்களப் பயங்கரவாதம் ஈழத் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.

“விடுதலைப் போராட்டம் என்பது செங்குருதி சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை” என்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகிறார் விடுதலை என்ற இலக்கை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது. விடுதலை வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை என்றார்.

பிரபாகரனின் தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம் குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு, சாதனைக்கு மதிப்பு எனலாம். அவர் மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம் தரித்ததில்லை.

தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம். அறிவு ஊடாகவும்,அறிவியல் ஊடாகவும் தமிழ் ஈழம் வளர வேண்டுமென்று ஆசைப்பட்டு அதற்காக உழைத்தவர்.

விடுதலைப் பெற்ற தமிழீழம் பொருளாதாரம் செழிப்பாக காணவேண்டுமென்டு திட்டமிட்டார்.

சாதி ஒழிப்பிற்கு அவர் முன்னுரிமை அளித்தார்.

சீதனக் கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்தார்.

மதச் சமத்துவத்தைப் பேணினார்.

தமிழீழ காவல்துறையை உருவாக்கி சட்ட ஒழுங்கை நிலைநாட்டினார்.

எல்லாவற்றிக்கும் மேலாக அவர் பெண்கள் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தைத் ஏற்படுத்தினார்.

ஒரு புதுமைப் பெண்னை, புரட்சிகரப் பெண்னை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் அதன் தாக்கம் நிரந்தரமானது.

தேசியத் தலைவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் “ மகளீர் படையணியின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று” என்று சொன்னார்.

தன்னாட்சி பெற்ற தமிழீழத்திற்கான அரசியல் சட்ட வரைவை உருவாக்குவதற்காக உலகின் தலைசிறந்த அரசறிவியல் பேராசியர்களையும் புலிகள் அமைப்பில் உறுப்பியம் பெற்ற வல்லுனர்களையும் ஒன்றிணைத்து ஒரு வரைவைத் தயாரித்தார் சாசனவியலாளர்களால் அந்த வரைவு போற்றி பாதுகாக்கப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட இனம் தொடர்ந்து ஒடுங்கியிராது என்பதற்கு பிரபாகரன் தொடுத்த விடுலைப் போர் சாட்சியாக அமைகிறது.

பிரபாகரன் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோசை நேசித்தார். அவரைப் போலவே பிரபாகரன் தூய்மையாக வாழ்ந்தார் நேத்தாஜியின் போராட்டப் பங்களிப்பு இன்னும் சரிவர கணிப்பிடப் படவில்லை. மழங்ககடிக்கப் படுகிறது என்று கூடச் சொல்லலாம்.

தமிழினத்தை கடந்த முப்பதிற்கும் மேலான ஆண்டு காலம் வழிநடத்தி வந்தார் பிரபாகரன்.

அவர்களின் தாக்கம் உலகத் தமிழினத்தால் மிக நன்றாக உணரப்படுகிறது.

உலக தமிழ்ச் சமுதாயத்தில் எது நடந்தாலும் அவருடைய தாக்கம் இல்லாமல் நடக்க முடியாதளவிற்கு அவர் முத்திரை பதித்துள்ளார்.

இன்றும் பல உலகநாடுகளின் தலைவர் பிரபாகரனின் மற்றும் பல போராளிகளின் நினைவுகூறும் நிகழ்வுகள் பல நடைபெறுகின்றன

பதில்: தமிழ் மறவன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.