ஆற்றில் பெப்சி கோலா நீரை உறிஞ்சிவிட்டது என்றால் கடைக்கோடியில் உள்ள கிராமத்தின் நிலத்தடி நீர் எங்கே சென்றது?

0 447

நாம் வாழும் நிலத்திலும் ஆறுகளிலும் தண்ணீர் ஏன் குறைந்துகொண்டே போகிறது குறித்து என்னால் முடிந்த அளவு பார்வையை முன்வைக்கிறேன்.

பெப்சி கொகோ கோலா போன்ற குளிர்பான நிறுவனங்கள் ஆற்றுப்படுக்கையில் உள்ள நீரை உறிஞ்சிவிட்டது என்றால் கடைக்கோடியில் உள்ள கிராமத்தின் நிலத்தடி நீர் எங்கே சென்றது?

சொன்னால் நம்ப மறுக்கும் நம் உள்ளம், நாம் தான் நம் தண்ணீரை விற்றுக்கொண்டிருக்கிறோம். முக்கியமாக தண்ணீர் பொதிந்துள்ள உணவு பொருட்களை விற்பது மூலம்.

அரசியல் சூழ்ச்சி காரணமாக பெரும்பாலான விவசாய நிலத்திலுள்ள நீர் சுரண்டபட்டுவிட்டது. தண்ணீர் எப்படி சுரண்டபடுகிறது அதை எப்படி தடுப்பது குறித்தான பார்வையை வைக்கிறேன்.

தாங்கள் வாழும் பகுதியில் நெல், கரும்பு, தக்காளி, வெள்ளரிக்காய், பழம் வகைகளான மாம்பழம், வாழைப்பழம், திராட்சை, தென்னை போன்ற தண்ணீர் வகையான உணவுகளை தோட்டம் முழுவதும் மொத்தமாக விவசாயம் செய்திருந்தாலோ அல்லது செய்தாலோ தண்ணீர் வறண்டுகொண்டே போகும்.

குறிப்பிட்ட காலம் ஒரு 10 வருடம் செய்தால் தங்கள் பகுதி வறட்சியை சந்திக்கும். அதுதான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் பல உயிர்கள் மடிவதற்க்கான நேரம் வந்துகொண்டிருக்கிறது.

ஒரே நாளில் அல்லது குறைந்த நாட்களில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற சிந்தனை, குலுக்கல் பரிசு/ லாபச் சீட்டு( லாட்டரி ) டிக்கட்களை வாங்க தூண்டுகிறது.

எத்தனை நாட்கள் நஷ்டம் ஏற்பட்டாலும் ஒரு நாள் பணம் அதிகமாக வரும் என்ற சிந்தனை அவர்களை வாங்க தூண்டிக்கொண்டே இருக்கும். அதே நுட்பம் தான் தக்காளி போன்ற பயிர் வகையிலும். வருடத்தில் 25 முதல் 35 நாட்கள் மிக அதிகமான லாபத்தை ஏற்படுத்தி மீதிருக்கும் 330 நாட்கள் மிககுறைந்த விலையை நிர்நயம் செய்து தண்ணீரை தக்காளி மூலம் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாட்டிற்க்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நுட்பம் மூலம் மிகக்குறைந்த செலவில் தண்ணீர் திருடப்படுகிறது. இது தக்காளி செடியில் மட்டும் கிடையாது. பல வகையான உணவுப்பயிர்களிலும் நடக்கிறது.

தண்ணீர் அதிகமுள்ள பொருட்களை விவசாயம் செய்தால் இன்னும் இரண்டே வருடங்களில் பல உயிரினங்கள் சாவதை பார்க்கலாம். மனித இனம் மட்டும் அழிவை சந்தித்தால் பிரச்சனை வராது.

இயற்கையில் வாழும் அனைத்து உயிர்களும் அழிவை நோக்கி பயனம் செய்கிறது. ஒரு நாட்டையே அழிப்பதற்க்கான திட்டம் தீட்டப்பட்டருக்கு. மிகப்பெரிய சூழ்ச்சி உள்ளது போல் எண்ணம் எழுகிறது. ஒவ்வொரு பகுதியாக ஆராயிச்சி செய்யபட்டு அந்த நிலப்பரப்பின் நுனுக்கங்களை தெரிந்து கொண்டு தேர்வு செய்து அழிவை ஏற்படுத்தியுள்ளனர்.

காலம் செல்லும் போது தண்ணீரீன் ஆழம் அதிகமாகிறதா குறைகிறதா தாங்களே யோசனை செய்யுங்கள். வறட்சி வந்துவிட்டால் உணவுகளை வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டும்.

நூறு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவுகளை இறக்குமதி செய்யமுடியுமா. அப்படியே இறக்குமதி செய்தாலும் தண்ணீரை இறக்குமதி செய்ய முடியுமா. தண்ணீரை இறக்குமதி செய்தாலும் மிக குறைந்த அளவில் தான் குளிர்பானம் / திரவ உணவுகளின் மூலம் இறக்குமதி செய்யப்படும். தாங்களே சிந்தனை செய்யுங்கள்.

மாட்டுப்பால் குடித்தால் மிகவும் நல்லது என்று செய்தியை பரப்பி பாலை வணிகமாக மாற்றிவிட்டனர். பல அன்பர்களுக்கு மாட்டு பாலை பழக்கபடுத்தியதால் தேவைக்காக ஜெர்சி மாடு உருவாக்கப்பட்டு அது இன்று எமனாக உருவெடுத்துள்ளது.

கறக்கும் மாட்டுப்பால் ஒரெடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்க்கு கொண்டு செல்வதால் திரவப்பொருளான தண்ணீர் மறைமுகமாக விற்க்கப்படுகிறது.

நீர் நிறைந்த ஆற்றுப்பகுதியில் ஜெர்சி மாட்டை வளர்க்கலாம் அதுவே மற்ற பகுதிகளில் வளர்த்தால் வறட்சி ஏற்படுவதை தடுக்க முடியாது. பாலுக்காக மட்டும் பல லிட்டர் பால் கறக்கும் மாடுகளை இனிமேல் வளர்க்காதிர்கள், வைத்திருந்தால் தங்கள் பகுதிக்கு ஆபத்து நிச்சயமாக வரும், விற்றுவிடுங்கள்.

பல பகுதிக்கு ஆபத்து ஏற்க்கனவே வந்துவிட்டது. எறுமையின் மீது எமன் வருவான் என்ற கதை கேள்வி பட்டதுண்டு அனால் இன்று பல லிட்டர் பால் கறக்கும் ஜெர்சி மாட்டின் மீதும் வருகிறான். ஜெர்சி வகையை சார்ந்த மாட்டுப்பாலை குடிப்பதால் தங்களுக்கும் ஆபத்து தங்கள் பகுதிக்கும் ஆபத்தே.

நகரத்தில இருக்கிற மக்களுக்கு எப்பொழுதும் எப்படி தண்ணீர் அவர்கள் பகுதிக்கு வருகிறதோ அது வந்துகொண்டே இருக்கிறது. அதனால் தண்ணீரின் வறட்சியை உணர்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு அல்லது உணர்வதற்க்கு தாமதமாகலாம்.

கிராமத்தில் இருப்பவர்கள் நிச்சயமாக உணர்ந்திருக்க வேண்டும், ஆனால் அதை பற்றி சிந்திக்க நெரமில்லை அல்லது சிந்திக்க முடியவில்லை. வேலை இருந்தால் உழைப்பு, தொலைக்காட்சி, கல்யாணம், காதுகுத்து, வயசுக்கு வந்த சடங்கு, சாவு, காரியம், புதுமனை புகுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கு. மக்கள் சிலர் புகழிலும் குடிபோதையில் தள்ளாடுகின்றனர்.

ஒரு விவசாய குடுபத்திற்க்கு பணம் அதிகம் செலவானால் வேறு எதோ ஒரு வழியில் ஈடுகட்டியாக வேண்டும். பாரம்பரிய விவசாயி எளிமையான வாழ்கையை விரும்புவான் என்றும் பணத்திற்க்காக தன்னை விற்க மாட்டான் என்றும் கேள்விபட்டிறுக்கிறேன்.

ஆனால் இன்று பணமென்ற மாயையில் சிக்கி தனிமனிதனின் தன்மானத்திற்க்காகவும் புகழுக்காகவும் இயற்கையை வேகமாக அழிக்கிறார்கள்.

நிலங்களை பொதுவாக மாற்றாமல் விவசாயம் செய்தாலும் பல பிரச்சனைகள் வரும். இதையும் கருத்தில் வையுங்கள். நிலங்கள் சாதியின் ஆதிக்கத்தில் உள்ளதால் சாதிக்கிடையே மோதல்கள் ஏற்பட்டும் வறட்சி அதிகமாகிறது.

எல்லோரும் தங்களை உயர்ந்தவர்களாக சித்தரிக்கவேண்டும் என்ற சிந்தனை உள்ளதால் பொருள் துறைகளில் பந்தா செய்து தங்கள் பகுதிக்குள்ளே அழித்துக்கொண்டு வாழ்கிறார்கள்.

விவசாய நிலம் அரசாங்க கட்டுபாட்டிற்க்கு எதிராக உள்ளதால் அரசாங்கத்தில் வேலை செய்யும் பெரும்பாலான அதிகாரிகள் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டனர். அதிகாரிகளுக்கு லாபம் வர வேண்டும் என்ற சிந்தனையில் பணத்திற்க்காக மருந்து தொழிலதிபர்களிடமும் வெளிநாட்டு விதை விற்பனர்களிடமும் நாட்டை விற்று விட்டனர்.

அரசாங்கம் மூலமாக பல விவசாயிகளுக்கு மா மரங்களும் தென்னை மரங்களும் மானியமாக கொடுக்கப்பட்டுள்ளது. வறட்சியை ஏற்படுத்துவதற்க்கு முன்பே போட்ட திட்டம் தான் இது. அவர்களால் தான் மிகபெரிய அளவில் வறட்சி வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.