பெரியாருக்கு முன்னால் தமிழ்நாட்டில் யாருமே பிறக்கவில்லையா..?

0 220

பெரியாருக்கு முன்னால் தமிழ்நாட்டில் யாருமே பிறக்கவில்லையா? எங்கு பார்த்தாலும் அண்ணா, பெரியார்தான். பிறகு எம்ஜீஆர்,கருணாநிதிதான், பேருந்து நிறுத்தம் முதல் கக்கூஸ் வரை இவர்கள் பெயரே நிலை நாட்டப்படுகிறது…!

இராஜராஜ சோழன், நரசிம்மவர்ம பல்லவன், தலையாலங்கானத்து நெடுஞ்செழியன், வல்வில் ஓரி, முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, மயிலுக்கு போர்வை கொடுத்த பேகன், சிபிச்சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன், அதியமான், ஔவையார், மருது சகோதரர்கள், கொடிகாத்த குமரன், வாஞ்சிநாதன், மகாகவி பாரதியார், சுப்பிரமணியம் சிவா, வ.உ.சிதம்பரம், தமிழ் தாத்தா உ.வே.சா, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, இரட்டை மலை சீனிவாசன், இவர்கள் பெயரை காணமுடியவில்லை. என்னய்யா உங்க பகுத்தறிவு..?

75வயதில் பெரியாருக்கு ஏன் திருமணம் என்றால் சில பதறுகள் ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டால் எந்த வயதில் வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்லலாம் என முட்டுக்கொடுகிறது..!

சாதியை ஒழிக்க ஒருவகையில் குரல் கொடுத்தார் சுயமரியாதை என்பதை உணர வைத்ததில் இவரும் ஒருவர் என்று கூறி பழகுங்கள் அதை விட்டு ஏதோ பெரியார் மட்டுமே தமிழகத்தை என்று மிகைபடுத்துவது திராவிடனுக்கு பெருமிதமாக இருக்கும் தமிழனுக்கு…?

தமிழன் பெருமையையும் சிறப்பையும் மறைத்து திராவிடத்தை உயர்த்தி பேசுவதில் தமிழனாகிய எனக்கு என்ன கெளரவம் கிடைத்துவிட போகிறது..?

You might also like

Leave A Reply

Your email address will not be published.