தமிழ் மகளாக இதை எதிர்க்கிறேன்! மன்னிப்பு கேட்கும் எண்ணமில்லை.. நடிகர் சத்யராஜ் மகள் அ திரடி.!அப்படி என்ன ஆச்சு தெரியுமா.?

0 855

தமிழகத்தில் ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று முன்னர் வைத்த கோரிக்கைக்காக மன்னிப்புக் கேட்க முடியாது என்று நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா கூறியுள்ளார்.பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக செயல்படுகிறார்.சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு திவ்யா சத்யராஜ் கடிதம் எழுதியது சமூகவலைதளங்களில் வைரலானது.

மேலும் தமிழகத்தில் ரதயாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் கோரிக்கை வைத்தார். இதற்கு எ திர்ப்புகள் எழுந்த நிலையில் அவர் ம ன்னிப்பு கேட்க வேண்டும் என சிலர் கூறினர்.

இது தொடர்பாக திவ்யா கூறுகையில், கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரதயாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது. எனவே ரதயாத்திரையை அனுமதிப்பது நியாயம் கிடையாது.

தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உ யிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரையை எதிர்க்கிறேன்.

மதத்தை வளர்க்கும் அக்கறை மக்களின் உ யிர் மீதும் உ டல்நலத்தின் மீதும் இல்லாதது வ ருத்தமாக இருக்கிறது. ரதயாத்திரையை எ திர்த்ததற்காக மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை என கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.