பூனை குறுக்கே சென்றால் அபசகுணமா..? எதனால்..?

0 317

பூனை குறுக்கே சென்றால், நாம் கெட்ட சகுனம் என்று கருதுகிறோம். ஆனால் அதற்கு உண்மையான அர்த்தம் என்னெவென்று தெரியவில்லை ஆனால் எங்க ஊர் பெருசுங்க சொன்ன கதை இது

பூனை குறுக்கே சென்றால் செல்லக் கூடாது என்பதன் அர்த்தம்?

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில், பூனையை பார்த்தால், அந்த வழியில் செல்ல வேண்டாம் என்று கூறுவார்களாம்.

ஏனெனில் பூனை செல்லும் அந்த வழியில் குடியிருப்புகள் இருக்கும். அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள்.

அதனால் அங்கு சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே இருக்கக்கூடும்.

ஆகவே அந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற நோக்கத்திற்காக, மன்னர் படைகள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

எனவே தான் பூனை குறுக்கே சென்றால் அந்த வழியாக செல்லக் கூடாது என்பதை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்துள்ளனர்

என்னதான் உலகம் டிஜிட்டல் மயமானாலூம் இன்னும் சில மூடநம்பிக்கை நிறைந்துள்ளது மக்கள் மத்தியில் அந்த வகையில் இதுவும் ஒன்று..!

மறக்காம இத கிளிக் பண்ணி நம்ம தமிழ் திமிரு யூடியூப் சேனல சப்கிரைப் பண்ணிடுங்க

You might also like

Leave A Reply

Your email address will not be published.