பட்டேல் சிலைக்கு எதிராக முட்டுகொடுக்கும் தமிழக விஞ்ஞானிகளா நீங்கள்..? உங்களுக்கான பதிவு

0 474

21 வயது சாமானியனாக எனது சிந்தனைக்கு எட்டியதை பதிவு செய்கிறேன் நீங்கள் எதிர்பார்க்கும் எந்த ஒரு அரசியல் ஞானமும் எனக்கில்லை இருந்தும் முயல்கிறேன்..!

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் இவருக்கு சிலை வைப்பது பெருமையே என்ன அவரின் கனவு திட்டமான இந்திய இணைப்பை மையப்படுத்தி அந்த 3000கோடியில் நதிகளை இணைக்க முயன்றிருந்தால்..!

இங்கு யாரும் சர்தார் வல்லபாய் படேல் சிலையை யாரும் எதிர்க்கவில்லை அதற்கு செலவு செய்த 3000கோடியைதான் எதிர்க்கிறார்கள்..!(காரணம் நாட்டின் நிலை)

எதிர்ப்பதற்கும், ஆதரிப்பதற்கும் ஒரே காரணம் அரசியல் இப்படி வெறுமனே சொன்னால் உங்களுக்கு புரியாது என்று நினைக்கிறேன்…

அரசியல் என்பது தன் கட்சி செய்யும், செய்த, செய்யப்போகும் தவறுகளை மறைத்துவிட்டு பிற கட்சி செய்யும் , செய்த செய்யபோகும் தவறுகளை மட்டுமே சுட்டி காட்டுவது…!

இதனால் இங்கு எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை என்று அடிப்படை தொண்டனாக உள்ள பதறுகள் புரிந்துகொண்டால் நன்றாக இருக்கும்..!

இறந்த எம்ஜிஆர்க்கு நூற்றாண்டு விழாவில் 1000பெற்றுக்கொண்டு கூட்டத்திற்கு இடம் பிடித்தவனெல்லாம் பட்டேல் சிலைக்கான 3000கோடியை தான் யோக்கியன் போல விமர்சனம் செய்யும் போது வேடிக்கையாகதான் உள்ளது..!

ஓட்டுக்கு பணம் பெற்று, இலவசம் என்ற பெயரில் கட்சிகள் கணக்கு காட்டி, டீவி,மிக்சி, கிரைண்டர், மடிக்கணினி,என பலவற்றை வாறிகொடுப்பது போல கொள்ளையடித்தபோது நீ எதிராக பேசியிருந்தால் இன்று உனக்கும் கூட தகுதி உள்ளது அந்த சிலைக்கு எதிராக குரல் எழுப்ப..!

இன்னும் சில தமிழக முட்டுகொடுப்பாளர்கள் குஜராத்தில் இன்னும் இருக்க வீடின்றி, வீதியில் தங்குகிறார்கள் என்று கூறும்போதும் தமிழகத்தை நினைக்கும் போது வேடிக்கையாக உள்ளது..!

இந்தியாவின் 20-30% தேவையை தமிழகம் பூர்த்திசெய்தபோதும் தமிழகத்தில் இருக்க வீடின்றி, உண்ண உணவு இன்றி தமிழகத்தில் வாழ்கிறார்கள் என்று சில பதருகளுக்கு நினைவு படுத்த கடமைப்பட்டுள்ளேன்

அரசியல் கட்சிகள் கொள்ளையடிக்க அடிமட்ட தொண்டனை பயன்படுத்துகின்றன இதை அறியாமல்,கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும், குக்கருக்கும், அவன் பின்னே சென்றதால் நீங்கள் அடைந்த வளர்ச்சி தான் என்ன..?

ஒரு வருடத்திற்கு சட்டசபையில் மிக்சர் தின்னதிற்கும் காப்பி குடித்ததிற்கும் 1கோடி கணக்கு காட்டியது தமிழக அரசு அப்போது உன் மொளத்தின் காரணம் என்ன..? ரொட்டி துண்டிற்கான விஸ்வாசமா…?

விவசாயிற்கு தண்ணீர் இல்லை , தனியார் நிறுவனங்களுக்கு தடைபடாமல் தண்ணீர் இன்றளவும் தமிழத்தில் கிடைத்துகொண்டுள்ளது இதை எதிர்த்து குரல்கொடுக்க மறுப்பதேனடா..?

இலவசத்திற்கும்,பணத்திற்கும் வாக்களித்த ஒருவன் அடுத்தவன் செய்யும் ஊழலை விமர்சிக்கும் போது வேடிக்கையாக தான் உள்ளது..!

முதலில் தமிழகத்தில் நடக்கின்ற,நடக்கபோகின்ற அத்தனை அழிவு திட்டத்தையும் எதிர்ப்பு தெரிவித்து தடை செய்யுங்கள்..!

எந்த ஒரு திட்டத்தையும் அரசியலாக்கினால் பணம் பார்க்கலாம் அதில் பொதுநலனோடு செயல்பட்டால் மக்கள் நலனாக இருக்கலாம்,

நீங்கள் பேசும் அரசியல் எது..? அரசியலா..? பொதுநலன..?

முடிவை உங்களின் முன்பே வைக்கிறேன்..!

மறக்காம இத கிளிக் நம்ம தமிழ் திமிரு யூடியூப் சேனல சப்கிரைப் பண்ணிடுங்க

You might also like

Leave A Reply

Your email address will not be published.