நீர்நிலைகளின் ஓரம் இதுபோன்ற உயரமான கல்லை பார்த்துள்ளீர்களா..?

0 609

இப்ப உள்ள இளசுகளுக்கு தெரிய வாய்ப்பில்லை சுமைதாங்கி கல் என் அப்பா சொல்லி கேள்விபட்டு இருக்கிறேன் இப்போ தான் நேரில் பார்க்கிறேன்

இடம்:
தஞ்சை வடசேரி அருகே உள்ள நெம்மேலி கிராமம்

சுமைதாங்கி கல் பெரும்பாலும் குளத்தின் அருகில் இருக்கும் அவ்வழியே செல்லும் வழி போக்கர்கள், வணிகர்கள் தங்கள் தலை மேல் உள்ள பாரத்தை தன் உயரத்துக்கு நிகராக உள்ள சுமைதாங்கி கல் மீது சுமையை இறக்கி வைத்து குளத்தில் குளித்து விட்டு யார் துணையும் இல்லாமல் தாமாகவே சுமையை தூக்கி வைத்து கொள்ள சுமை தாங்கி பயன்பட்டுள்ளது.

அக்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வயிற்று சுமையுடன் இறந்ததால் அவர்களின் நினைவாகவும் சுமைதாங்கி கல் கட்டப்பட்டுள்ளது. என வரலாறு கூறுகிறது

மற்றவரின் சுமையை தாங்கி கொள்வதன் மூலமாக கர்ப்பிணி பெண்களின் ஆத்மா சாந்தியடைவதாகவும் கருதப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.