பாதாம் பிசின் தெரியுமா உங்களுக்கு..? அப்புடின்னா என்னான்னு கேக்குறீங்களா..? இத படிச்சு பாருங்க..!

0 910

மதுரையில் இருந்து உலகப்புகழ் பெற்ற ஜிகர்தண்டாவின் ருசிக்கு முக்கிய காரணம் பாதாம் பிசின். ஜிகர் தண்டாவை தெரிந்த அளவிற்கு பாதாம் பிசின் பற்றி நமக்கு தெரியாது. இயற்கை நமக்கு அளித்த அற்புதமான மருந்தே உணவுகளில் இதுவும் ஒன்று.

பாதாம் பிசின்

Badam Pisin Uses Almond gum என்று ஆங்கிலத்திலும், பாதாம் கோந்து என்று ஹிந்தியிலும் பாதாம் பிசின் என்று தமிழிலும் அழைக்கப்படுகிறது. பாதாம் பிசின் துருக்கி, ஆப்கானிஸ்தான் பகுதியில் இருந்து தான் இந்தியாவிற்க்கு அதிக அளவில் இறக்குமதி ஆகிறது.

வட இந்தியாவோடு ஒப்பிடும்போது நமது பாதாம் பிசின் பயன்பாடும், அதனைப்பற்றிய அறிவும் குறைவு தான். பாதாம் மரப்பட்டைகளில் சேகரமாகிய பிசின் தான் பாதாம் பிசின். வெண்ணிறமாக ஒழுங்கற்ற உருவில் இருக்கும்.

பாதாம் பிசினை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால், முழுவதும் கரைந்து கண்ணாடி போல நீர்மம் கிடைக்கும். இதனை நம் விருப்பப்படி உணவுகளில் கலந்து கொள்ளலாம்.

பாதாம் பிசின் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நூறுகிராம் நாப்பது ரூபாய். ஒவ்வொரு ஊருக்கும் விலை மாறுபடலாம்.

பாதாம் பிசின் பயன்கள்

செர்ரி பழங்களை பாதுகாக்க உருக்கிய பாதாம் பிசினில் முக்கி எடுத்து பாதுகாப்பார்கள்.

இதன் குளிர்ச்சியான தன்மையால், உடல்சூடால் அவதிப்படுபவர்கள் பாதாம் பிசினை பயன்படுத்துபவர்.

வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும், எனவே தான் அல்சருக்கு சிறந்த மருந்து.

வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல மருந்து.

உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும்.

வட இந்தியாவில் கோந்து லட்டு செய்து கர்ப்பிணி பெண்களுக்கு கொடுப்பர். இதன் சத்துக்களுக்காகவும், குளிர்ச்சி தரும் தன்மைக்காகவும் கொடுக்கிறார்கள்.

எலும்புகளுக்கு உறுதியும் உடலுக்கு வலுவையும் தருகிறது.

இயற்கையில் கிடைக்கும் பிசின் இதில் செயற்கை நிறமோ, மணமோ இல்லாததால் குழந்தைகள் உணவில், அதாவது ஐஸ்கிரீம், ஜெல்லியில் சேர்க்கிறார்கள்.

பளு தூக்கும் வீரர்களுக்கு உடல் வலுவையும், எடையையும் அதிகரிக்க தினசரி உணவில் சேர்த்துக் கொடுக்கிறார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.