குளிர்காலத்தில் தலை முடி அதிகம் கொட்டுவதற்கான அறிவியல் காரணமும், அதன் கட்டுப்பாடும்..!

0 555

குளிர்காலத்தில் தலை முடி அதிகம் கொட்டும் என்ற கருத்துக்கு எதிராக குளிர்காலத்தில் நமது கூந்தலில் மெலாடோனின் என்ற கெமிக்கல் அதிகம் சுரக்கும் எனவும் அது முடியுதிர்வை தடுத்து புதிய ரோமங்கள் வளர உதவும் என்ற கருத்தும் பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகிறது!

பின்பு ஏன் தினமும் தலை சீவுகையில் சீப்பில் சிறிது அதிகமாகவே முடி கொட்டுகிறதாம்? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான காரணங்கள் பல.

குளிர்காலத்தில் சருமத்தை போலவே ஸ்கேல்ப்பும் வறண்டுவிடும். இதனால் கூந்தல் சொரசொரப்பாக எளிதில் உடையும் தன்மையை பெற்றுவிடும். வறண்ட கூந்தலில் பொடுகு தொல்லையும் அதிகரித்து முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

எனினும், குளிர்காலத்தில் இயற்கை காரணிகள் மட்டுமே கூந்தலை உதிர செய்கின்றன என்று பொதுவாக கூறிவிட முடியாது.

வெளியில் குளிர்ச்சியும் வீட்டினுள் நிலவும் மிதமான வெப்பமும் சேர்ந்து தலைமுடியை பதிக்க செய்து விடும். இதனால் முடி கொட்டுதல் மற்றும் ஸ்பிளிட் என்ட் ஆகியவை ஏற்படலாம். ஸ்டைலிங் கருவிகள் மற்றும் டிரையர்கள் மேலும் கூந்தலை உலர செய்து பாதிப்பினை ஏற்படுத்திவிடும்.

இறுக்கமான ஸ்கார்ஃப் மற்றும் கேப் அணிந்தால் தலைமுடியை கடுமையான குளிர் மற்றும் காற்றிலிருந்து பாதுகாக்கலாம் என்று நீங்கள் எண்ணினால் அது தவறு. மிக இறுக்கமான ஸ்கார்ஃபுகள், கேப் மற்றும் ஹேட்கள் முடியை வேரிலிருந்து பிடுங்கி எறிந்து விடக்கூடும்.

எனினும் குளிர் காலம் கூந்தலுக்கு பாதிப்பினை மட்டும் ஏற்படுத்தும் என்றும் கூறிவிட முடியாது. பின்வரும் சில விஷயங்கள் இந்த குளிர் காலத்தில் உங்களது கூந்தல் பளபளப்பு இழக்காமல் பாதுகாத்திட உதவக்கூடியவையாகும்.

ரெகுலராக தலை முடிக்கு நல்ல தரமான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது முடிக்கு தேவையான வைட்டமின் மற்றும் ஃபேட்டி ஆசிட்களை தந்திடும். ஜோஜோபா போன்ற எண்ணெய்கள் தலைமுடியில் சுரந்து ஈரப்பதத்தை கொடுக்கும் சீபம் போன்றதாகும். இதனை ஸ்கேல்ப் எளிதில் உறிஞ்சிக் கொள்ளும்.

குளிர்காலத்தில் தலைமுடிக்கு அடிக்கடி ஷாம்பூ போடுவதை குறைக்கவும். சோடியம் லாவ்ரெல் அல்லது சோடியம் மைரெத் சல்ஃபேட் கொண்ட ஷாம்பூக்களை குறிப்பாக தவிர்ப்பது நல்ல யோசனையாகும். பாரபின் அல்லது டைகள் அல்லாத ஷாம்பூக்கள் கூந்தலுக்கு இயற்கையான மினுமினுப்பை சேர்க்கும்.

குளிரில் இருந்து கூந்தலை பாதுகாக்க மெல்லிய ஸ்கார்ஃபை பயன்படுத்தலாம். ஆனால் அது ஸ்கேல்ப்பின் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் அளவும் இறுக்கமாக இருக்க கூடாது!

ஸ்கால்ப் மற்றும் கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களது உடலுக்கு நீர் தேவைப்படுவதை போல உங்களது கூந்தலுக்கு அவசியம். உங்களது கூந்தலை ஆரோக்கியமாக வைக்க அதிகளவு நீர் அருந்த வேண்டும்.

முடியை அதிகம் ஸ்டைல் செய்ய வேண்டாம். குளிர்காலத்தில், ஸ்டைலிங்க் கருவிகளான டிரையர்கள் மற்றும் கர்லர்கள் ஆகியவற்றை பயன்படுத்தினால் கூந்தல் மற்றும் ஸ்கேல்ப் வறண்டு விடும். முடியை இயற்கையாகவே உலர விடுங்கள்.

முடியை அடிக்கடி டிரிம் செய்யுங்கள். இதனால் ஸ்பிளிட் என்ட் குறைந்து முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். குளிர்காலம் என்பதற்காக உங்களது கூந்தலை சுடு நீரில் அலசக் கூடாது. வெதுவெதுப்பான நீர் தலைமுடிக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்.

ஈரக் கூந்தலுடன் வெளியில் செல்லாதீர்கள். குளிர்காலத்தில் கூந்தல் உலர திக நேரமாகும். ஆனால் குளிர் காற்று அதற்கு உதவாது. வீட்டை விட்டு வெளியில் செல்லும் முன் முடியை இயற்கையாகவே உலர வைக்கவும். மாஸ்க் பூசி தலைமுடி பராமரிக்கவும்.

ஆழ்ந்த கண்டீஷனிங் மாஸ்குளை பயன்படுத்தினால் உங்கள் கூந்தல் மகிழும். வீட்டில் உள்ள பொருட்களான அவகாடோ, தயிர், மற்றும் முட்டையின் வெள்ளை கரு கூந்தலுக்கு தேவையான கூடுதல் ஈரப்பதத்தை தரக்கூடிய பொருட்களாகும்.

புரதம், இரும்பு (கீரைகள்), ஜிங்க் (நட்ஸ் சிறந்த உணவு) மற்றும் விட்டமின் சி (சிட்ரஸ் பழங்கள்) நிறைந்த உணவுகளை நன்கு உண்ண வேண்டும்.

வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் உங்களது அருமையான கூந்தலை உலகுக்கு காண்பித்து மகிழுங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.