இதற்குமேல் நமக்கு வாழ்வா சாவா என எதற்கும் தயாராக இருப்போம்..!

0 320

வாழ்வா சாவா ?

ஐந்து வயதில் ஒரு புலி ஆட்கொல்லியாக மாற வாய்ப்பு என்பது மிக மிக குறைவு. இந்த வயதில் அடிபட்டு பெரிய விலங்குகளை வேட்டையாட முடியாத நிலையில் வேண்டுமானால் அது எளிய இரையான மனிதனை வேட்டையாடலாம்.

அவ்னி விசயத்தில் அதற்கும் வாய்ப்பில்லை. அதற்கான காரணத்தை நான் எதைவைத்துச் சொல்கிறேன் என்றால், உடலளவில் பாதிப்படைந்த ஒரு புலியால் மூன்றுமாத காலங்களுக்கு மேலாக நூற்றுக்கணக்கான வேட்டைக் காரர்களிடமிருந்து தப்பித்து வாழ்வது என்பது மிக கடினமான ஒன்று.

அதையும் தாண்டி கொல்லப்பட்ட மனிதர்கள் பெரும்பாலும் எங்கே வைத்து கொல்லப் பட்டதாக சொல்கிறார்கள் என்றால், மனிதர்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக தடைசெய்யப்பட்ட core zone எனப்படுகிற அடர்ந்த வனப்பகுதி.

இங்கே மனிதர்களுக்கு(பொதுமக்கள்) என்ன வேலை ? அல்லது நடமாட அனுமதித்தவர்கள் யார் ?…

கொல்லப்பட்ட மனிதர்களை ஆய்வு செய்ததின் மூலம் அனைத்து கொலைகளுமே அவ்னியால் நடத்தப்படவில்லை.

இதில் வேறொரு ஆண்புலியும் சம்பந்தப் பட்டிருக்கிறது என்கிறார்கள். இதன்மூலம் நமக்கு விளங்குவது என்னவென்றால், அடுத்த புலிக் கொலைக்கு காரணத்தை இப்போதே விதைக்க துவங்கி விட்டார்கள் என்பது மட்டும் புரிகிறது.

இப்படியே காரணங்களை உருவாக்கி மெல்ல மெல்ல அந்தக் காட்டிலுள்ள புலிகள் ஒவ்வொன்றாக இனி கொல்லப் படலாம்…

சாதாரணமாகவே மிக சிறிய செலவினங்களைக்கூட எதிர்கொள்ள மறுக்கும் அல்லது தயங்கும் வனத்துறை, அந்த வேட்டையாடி மனிதனான நவாப் ஷாஃபத் அலியின் மகன் அஸ்கர் அலிகான் மற்றும் அவனது நூற்றுக் கணக்காண குழுவிற்கு ஒருநாள் இரண்டுநாள் அல்ல, சுமார் மூன்று மாத கலத்திற்கு மேலாக செலவை செய்திருக்குமா ?

இல்லையென்றால் அந்த செலவுகளை ஏற்றது யார் என்பதுதான் நமது மிக முக்கியமான சந்தேகம்…

இதையெல்லாம் வைத்து கணக்கிட்டுப் பார்த்தோமானால் இதன் பின்னனியில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. யாரோ என்னென்ன காரணத்திற்காகவோ இந்த நிகழ்வை மறைமுகமாக இயக்குகிறார்கள்.

ஒரு வேளை அந்த புலிவாழும் காடுகூட அவர்களுக்கு மிக முக்கியமான இடமாக தேவைப்படலாம்…

இந்த நாட்டில் கேள்விகளை முன்வைக்காத விலங்குகள் மற்றுமல்ல, இனி நாமும்கூட, நமது அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டு கொல்லப் படலாம்….

இதற்குமேல் நமக்கு வாழ்வா சாவா என எதற்கும் தயாராக இருப்போம்

பதிவு: Ramamurthi Ram

மறக்காம இத கிளிக் பண்ணி நம்ம தமிழ் திமிரு யூடியூப் சேனல சப்கிரைப் பண்ணிடுங்க

You might also like

Leave A Reply

Your email address will not be published.