மழை பொழியும் அளவை எவ்வாறு கணக்கிடுகிறார்கள்..? இத்தனை செ.மீ மழை பெய்தது என்பதின் வரையறை

0 278

மழையை சாதாரண மழைமானி மூலம் அளவிடலாம். அஃது 100மிமீ (4 அங்குலம் பிளாஸ்டிக்) அல்லது 200மிமீ(8அங்குலம் உலோகம்) என்ற அளவுகளில் இருக்கும். சாதாரண மழை மானி ஆடி அல்லது உலோகத்தால் ஆன இரண்டு நீளுருளைகளையும் ஒரு புனலையும் கொண்டது. உட்புற உருளை 0மிமீ முதல் 25மிமீ (0.98 அங்குலம்) வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உட்புற உருளையின் மேல் உள்ள புனல் மழை நீரை அந்த உருளைக்குள் செலுத்துமாறு அமைக்கபட்டிருக்கும். உட்புற உருளை நிறைந்தபின் மழை நீர் மேற்புற உருளையில் சேகரிக்கப்படும்.

அளவிடும் முறை

பொதுவாக ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் மழை அளவிடப்படும். எனவே மழையை அளவிடும்முன் நேரத்தை குறித்துக்கொள்வது அவசியம். மழைமானியை ஒரு பொதுவான, இடர்பாடுகள் இல்லாத இடத்தில் மழை பெய்யும் நேரத்தில் திறந்து வைக்கவும். சரியாக 24 மணிநேரத்திற்கு பிறகு மானியில் உள்ள நீரின் அளவை மில்லி லீட்டர் அளவில் எடுக்கவேண்டும். நீர் ஒரு திரவம் என்பதால் மில்லி லீட்டர்என்ற அளவைவிட லீட்டர் என்ற அளவில் மாற்றினால் தெளிவாக இருக்கும். மழையை அளவிடும் SI அலகு மில்லி லீட்டர் ஆகும்.

“ஒரு மில்லிமீட்டர் மழை அளவு என்பது ஒரு லிட்டர் / ஒரு சதுர மீட்டருக்கு சமம்.”

எனவே, 10மிமீ மழை என்று பதிவானால், அதை 10 லிட்டர் / சதுர மீட்டர் என்று எடுத்துகொள்ளவும். ஒரு ஊரில் எவ்வளவு மழை பெய்துள்ளது என கணக்கிட, அந்த ஊரின் பரப்பளவு(சதுர மீட்டரில்) தெரிந்திருக்க வேண்டும். சென்னையின் பரப்பளவு 174 சதுர கிலோமீட்டர் (174 x 10,00,000 சதுர மீட்டர்). எனவே சென்னையில்1mm மழை என்பது 17,40,00,000 லீட்டர்மழை பெய்ததாகக்கொள்ளலாம்

கட்டாயம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய தகவல் இது..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.