பாரம்பரிய விதை திருட்டு பற்றி தெரிந்த அளவிற்கு விந்தணு திருட்டு பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை..!

0 578

இந்திய நாட்டு ரகத்தில் காங்கேயம், சிகப்பசக்கி, தார்பார்கர், சாகிவால்னு பல வகைகள் இருக்கு.

ஆனா, ஜெர்சி, பிரிசியன் ரெட்டேன், சிவிஸ் பிரவுன் போன்ற அயல்நாட்டு இன மாடுகளைத்தான் சமீபகாலமா விவசாயிகள் விரும்பி வளர்க்கிறாங்க.

நாட்டு மாடுங்க நாள் ஒன்றுக்கு 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை குறைந்த அளவு பாலைத் தருவதாலும், பால் பற்றாக்குறை ஏற்படுவதாலும் சில மிருக இனத்திலிருந்து ஜீன் மாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டுப் பசுக்களில் இருந்து பால் உற்பத்தி செய்ய விவசாயிகளை அரசே ஊக்குவிச்சிக்கிட்டு வருது.

ஜெர்சி இன மாடுகளில் வேர்வை நாளங்களும் திமில்களும் இல்லாததால, அதோட வெப்பம் பால், சிறுநீர் மூலமாத்தான் வெளியேறுது.

மேலும் இம்மாடுகளின் கன்றுகள் 6 முதல் 8 மாதத்திற்குள் பருவமடைகின்றன. அதுமட்டுமில்லாம அயல்நாட்டு இன மாடுகளோட சாணமும், சிறுநீரும் மண்ணுக்கும் மக்களுக்கும் எந்த நன்மையையும் கொடுக்கிறதில்ல.காரணம் அதற்கான உணவு முறைகள் செயற்கையை சார்ந்து உள்ளது

இதுவே நம்ம நாட்டு மாடுகள்ல வேர்வை நாளமும், திமிலும் இருக்கிறது மட்டுமில்லாம, சிறுநீர், சாணத்திலிருந்து இயற்கை உரம் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.

இவ்வளவு சிறப்புகள் நாட்டு மாடுகளில் இருந்தாலும் பால் அதிகமா கொடுக்கிற ஒரே காரணத்தினாலேயே அயல்நாட்டு இனங்களை இந்தியா முழுவதும் விவசாயிங்க வளர்த்துட்டு வர்றாங்க. தற்போது தமிழகத்தில் காங்கேய மாடுகள் 80 சதவிகிதம் வரை அழிஞ்சு போயிடுச்சி.

அதுமட்டுமல்லாது காங்கேயம் காளையின் விந்தணுக்கள் திருடப்பட்டதன் பின்னணியில் உள்ள வரலாற்று அரசியலை ஆராயும்போது அதிர்ச்சியளிக்கும் படியாக உள்ளது.

சிந்துசமவெளி நாகரிகம் என்பது தென்னிந்திய பழங்குடிகள் குறிப்பாக தமிழர்களின் நாகரீகமென எண்ணற்ற வரலாற்றாய்வாளர்கள் மெய்பித்தபின் அதன் தடயங்களை குழப்பும்படியாக இதுபோன்ற பித்தலாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் காளைமாடுகள் பெருத்த திமிலுடன் காணப்படும் தமிழ்நாட்டு மாடான காங்கேயம் காளைகளாகும்.

ஆனால் இன்று சிந்துவெளியில் வடநாட்டு ஆரியப்பழங்குடிகளிடையெ வளர்க்கப்படும் மாடானது சிந்து என்ற வகை மாடாகும்.

எனவே சிந்துவெளி பண்பாட்டினை தனதாக்கிக்கொள்ளவும் அது ஒரு நிலைத்த ஆரியபண்பாடாக காண்பிக்கவும் தமிழ்நாட்டு காங்கேயம் காளைமாட்டின் விந்தணுவை திருடிச்சென்று சிந்துபகுதியில் மரபணுமாற்றப்பட்ட கங்கராஜ காளைகளை உருவாக்கியுள்ளனர்.

18ம் நூற்றாண்டில் பிரேசில் இந்தியாவிலிருந்து கால்நடைகளை ஏற்றுமதி செய்த்தில் கொண்டுசெல்லப்பட்டதுதான் இன்றுள்ள பிரேசில் காளைகள் இவை அனைத்தும் காங்கேயம் காளைகளே ஆகும்.

தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய விதைகளை திருடிச்சென்று மரபணுமாற்றம் செய்யும் வழக்கங்களை தொடர்ந்து விந்தணுக்களை திருடிச்செல்லும் வழக்கமும் தமிழர் பண்பாட்டின் அழிவினை கண்முன்னே நிறுத்துகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.