எறும்புகள் ஏன் வரிசையாக செல்கின்றன..? அதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானது..!

0 359

உலகில் 12,000 இற்கு மேற்பட்ட எறும்பு இனங்கள் வாழ்கின்றன. எல்லா எறும்பு இனங்களுமே கூட்டாக வாழ்பவை. ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்க்கையை மனிதன் வாழ ஆரம்பிப்பதற்கு முன்னிருந்தே இந்த சிறிய மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

எல்லா எறும்பு இனங்களிலும் ஒவ்வொரு குழுக்களிலும் ஒரு ராணி எறும்பு இருக்கும். அவருக்கு கீழ் படைவீரக்ள, தொழிலாளர்கள், கட்டடக்கலைஞர்கள், உணவு சேகரிப்போர் என பல மட்டங்களில் எறும்புகள் இருக்கும். இவர்களுக்கு தலைமை தாங்க ஒரு தலைவரும் இருப்பார்.

பல சாகசக் கதைகளில் வரும் சிறுவர்கள் காடுகளிற்கு பிரயாணம் செய்யும் பொழுது தாம் வழிமாறி சென்றுவிடாதிருப்பதற்காக உணவுப்பொருட்கள் அல்லது கற்கள், மரக்கிளைகள், இலைகள் போன்றவற்றை பாதையில் போட்டு செல்வர். ஒருவர் அவ்வாறு போட்டு செல்லும் பொழுது மற்றவர்கள் அவரை பின்தொடர்வார்கள்.

இதையேதான் எறும்புகளும் செய்கின்றன. தமது வாழிடத்திற்கான பாதையை அடையாளம் கண்டுகொள்ளவும், தமது தலைவரை பின்பற்றவும் இவ்வாறு வரிசையாக செல்கின்றன.

தலைவர் எறும்பு அல்லது முதலில் செல்லும் எறும்பு Pheromone என்ற ஒரு இரசாயனத்தை தனது பாதையில் விட்டு செல்வார். மற்றவர்கள் அந்த இரசாயனத்தை முகர்ந்து பின்தொடர்வார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.