குழு : கல கல கல கல கல
கல கல கல கல கல
கதவுல மறுவுல
ஒளியிற வேகமா
பள பள பள பள பள
பள பள பள பள பள
திரு திரு விழியிலே
வெட்கம் பாரம்மா
குழு : சல சல சல சல சல….
சல சல சல சல சல….
குறு குறு மனசுல
புது மழைதான் அம்மா
தல தல தல தல தல
தல தல தல தல தல
இரவுல கல கல
கனவுகள்தான்ம்மா
ஆண் : தங்க கிளி ஒன்னு
தத்தி பழகுது
கத்து கொடுத்தது
யாரம்மா
வங்கக்கடல் தந்த
முத்துச்சரம் ஒன்னு
வெட்கத்தில் ஓடுது ஏனம்மா
ஆண் : பள பள கூரைப்பட்டு
நெளியுது கூச்சப்பட்டு
முதல் முறை
நாணப்பட்டதென்னம்மா
மன்னனை கட்டிக்கிட்டு
அண்ணணை விட்டுப்புட்டு
இன்னொரு ஊரு போக எண்ணமா
குழு : கல கல கல கல கல
கல கல கல கல கல
கதவுல மறுவுல
ஒளியிற வேகமா
பள பள பள பள பள
பள பள பள பள பள
திரு திரு விழியிலே
வெட்கம் பாரம்மா
ஆண் : தங்க கிளி ஒன்னு
தத்தி பழகுது
கத்து கொடுத்தது
யாரம்மா
வங்கக்கடல் தந்த
முத்துச்சரம் ஒன்னு
வெட்கத்தில் ஓடுது ஏனம்மா
ஆண் : பிஞ்சுப்பூ இதழாட
இதழோடு சொல்லாட
வாழைப்பூ கையாட
சொக்கத்தான் ஆட
ஆண் : மருதானி விரலாட
மழை மேக குழலாட
மானாட மயிலாட
நெஞ்சம் கூத்தாட
ஆண் : அம்மா உன் காதோரம்
ஆணிப்பொன்னாட
குழு : ஆஹ் ஹ ஹ ஹா…..
ஆண் : ஆறேழு மாதத்தில்
தாலிப்பொன்னாட
குழு : ஆஹ் ஹ ஹ ஹா…..
ஆண் : நாளைக்கு நாயகன்
கைகளில் ஆட
ஆனந்தம் என் கண்களில் ஆட
குழு : சித்திரை கட்டில் ஆட
பங்குனி தொட்டில் ஆட
பிள்ளைகள் ஊஞ்சல் ஆடிப்பாட
ஓஓஹோ
ஆண் மற்றும் குழு :
கண்களில் கனவே ஆட
கனவுகள் கரகம் ஆட
அண்ணனின் ஏக்கம் கொஞ்சம் கூட
ஓஓஹோ
ஆண் : தங்க கிளி ஒன்னு
தத்தி பழகுது
கத்து கொடுத்தது
யாரம்மா
வங்கக்கடல் தந்த
முத்துச்சரம் ஒன்னு
வெட்கத்தில் ஓடுது ஏனம்மா
ஆண் : பல்லக்கு பரிவாரம்
தங்கச்சி அதிகாரம்
கை கட்டி வாய்பொத்தி
ஏவல் நான் செய்ய
பெண் : தாய்பாலில் சில நாளும்
உன் தோளில் பல நாளும்
நான் தானே வளர்ந்தேனே
நீயும் என் தாயே
பெண் : ஒப்பந்தம் போடாது
தொப்புள்கொடி உறவு
குழு : ஆஹ் ஹ ஹ ஹா…..
பெண் : ஒருபோதும் மூடாது
என் பாச கதவு
குழு : ஆஹ் ஹ ஹ ஹா…..
இருவர் : ஊருக்குள் உள்ளது
ஆயிரம் வீடு
நம்மை போல வாழ்வது யாரு
ஆண் : பள பள கூரைப்பட்டு
நெளியுது கூச்சப்பட்டு
முதல் முறை
நாணப்பட்டதென்னம்மா
மன்னனை கட்டிக்கிட்டு
அண்ணணை விட்டுப்புட்டு
இன்னொரு ஊரு போக எண்ணமா
ஆண் : தங்க கிளி ஒன்னு
தத்தி பழகுது
கத்து கொடுத்தது
யாரம்மா
வங்கக்கடல் தந்த
முத்துச்சரம் ஒன்னு
வெட்கத்தில் ஓடுது ஏனம்மா