Male : Athi athika athai madi melae
Aadi kidandhaal sugamallo
Female : Thathi thathika thathai mozhi pesum
Thangakiligal naamallo
Male : Naangalellaam oar uyirthaan
Female : Nadanthuvandhaal oar nizhal thaan
Male : Naam sirithaal mellisaithaan
Chorus : Athi athika athai madi melae
Aadi kidandhaal sugamallo
Chorus : Thathi thathika thathai mozhi pesum
Thangakiligal naamallo
Female : Kottum mazhaiyil kodigalaai nanaigirom
Thitum annai selaiyil oligirom
Male : Ettum kilaiyilae anilgalaai thirigirom
Thattum kadhavai anbinaal thirakirom
Female : Thaalaatum satham matum veetil oivathillai
Male : Vayathaana ellorumae innum chinna pillai
Female : Aanandham enbathan arthamum naamallo
Chorus : Athi athika athai madi melae
Aadi kidandhaal sugamallo
Chorus : Thathi thathika thathai mozhi pesum
Thangakiligal naamallo
Chorus : ………………………………
Male : Kangal veru kanavugal onrduthaan
Kaigal veru regaigal ondruthaan
Female : Araigal veru aanandham ondru thaan
Uruvam veru unarvugal ondruthaan
Male : Kadigaara mullil engal munnorgalin naatkal
Female : Naduveetu muchathilae naangal vaazhum pookal
Male : Paasathin thottathil pookalum naamallo
Chorus : Athi athika athai madi melae
Aadi kidandhaal sugamallo
Chorus : Thathi thathika thathai mozhi pesum
Thangakiligal naamallo
Female : Naangalellaam oar uyirthaan
Male : Nadanthuvandhaal oar nizhal thaan
Female : Naam sirithaal mellisaithaan
Chorus : Athi athika athai madi melae
Aadi kidandhaal sugamallo
Chorus : Thathi thathika thathai mozhi pesum
Thangakiligal naamallo
ஆண் : அத்தி அத்திக்கா
அத்தை மடிமேலே ஆடி
கிடந்தால் சுகமல்லோ
பெண் : தத்தி தத்திக்கா
தத்தை மொழி பேசும்
தங்கக்கிளிகள் நாமல்லோ
ஆண் : நாங்களெல்லாம்
ஓா் உயிர்தான்
பெண் : நடந்துவந்தால்
ஓா் நிழல் தான்
ஆண் : நாம் சிரித்தால்
மெல்லிசைதான்
குழு : அத்தி அத்திக்கா
அத்தை மடிமேலே ஆடி
கிடந்தால் சுகமல்லோ
குழு : தத்தி தத்திக்கா
தத்தை மொழி பேசும்
தங்கக்கிளிகள் நாமல்லோ
பெண் : கொட்டும் மழையில்
கொடிகளாய் நனைகிறோம்
திட்டும் அன்னை சேலையில்
ஒளிகிறோம்
ஆண் : எட்டும் கிளையிலே
அனில்களாய் திரிகிறோம்
தட்டும் கதவை அன்பினால்
திறக்கிறோம்
பெண் : தாலாட்டும்
சத்தம் மட்டும் வீட்டில்
ஓய்வதில்லை
ஆண் : வயதான எல்லோருமே
இன்னும் சின்ன பிள்ளை
பெண் : ஆனந்தம் என்பதன்
அர்த்தமும் நாமல்லோ
குழு : அத்தி அத்திக்கா
அத்தை மடிமேலே ஆடி
கிடந்தால் சுகமல்லோ
குழு : தத்தி தத்திக்கா
தத்தை மொழி பேசும்
தங்கக்கிளிகள் நாமல்லோ
குழு : …………………………..
ஆண் : கண்கள் வேறு
கனவுகள் ஒன்றுதான்
கைகள் வேறு ரேகைகள்
ஒன்றுதான்
பெண் : அறைகள் வேறு
ஆனந்தம் ஒன்றுதான்
உருவம் வேறு உணர்வுகள்
ஒன்றுதான்
ஆண் : கடிகார முள்ளில்
எங்கள் முன்னோர்களின்
நாட்கள்
பெண் : நடுவீட்டு முற்றத்திலே
நாங்கள் வாழும் பூக்கள்
ஆண் : பாசத்தின் தோட்டத்தில்
பூக்களும் நாமல்லோ
குழு : அத்தி அத்திக்கா
அத்தை மடிமேலே ஆடி
கிடந்தால் சுகமல்லோ
குழு : தத்தி தத்திக்கா
தத்தை மொழி பேசும்
தங்கக்கிளிகள் நாமல்லோ
பெண் : நாங்களெல்லாம்
ஓா் உயிர்தான்
ஆண் : நடந்துவந்தால்
ஓா் நிழல் தான்
பெண் : நாம் சிரித்தால்
மெல்லிசைதான்
குழு : அத்தி அத்திக்கா
அத்தை மடிமேலே ஆடி
கிடந்தால் சுகமல்லோ
குழு : தத்தி தத்திக்கா
தத்தை மொழி பேசும்
தங்கக்கிளிகள் நாமல்லோ