இனி நீங்களும் குடிக்கலாம் கூழ்..! அட இது தெரியாம போச்சே இவ்வளவு நாளா…!

0 535

கேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி

கம்பை ஊறவைத்து இடித்துத்தான் இதனை செய்வார்கள்.கம்புமாவு கிடைப்பதால்  அதையே பயன்படுத்தியும் கொள்ளலாம்

கேழ்வரகு மாவு & கம்பு மாவு இரண்டையும் கலந்து செய்யும்போது நன்றாக இருக்கும்.அல்லது இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும்கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.

கேழ்வரகு மாவை புளிக்க வைத்துச் செய்யும்போது சுவை கூடுதலாக இருக்கும்.அல்லது இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து உடனடியாகவும் தயாரித்துக்கொள்ளலாம்.

தேவையானவை:

கேழ்வரகு மாவு_1/2 கப்
கம்பு மாவு_1/2 கப்
உப்பு_தேவைக்கு

செய்முறை:

முதல் நாளிரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க கரைத்து,புளிக்க வைக்கவும். காலையில் பார்த்தால் மாவு புளித்து,பொங்கினாற்போல் இருக்க வேண்டும். இட்லி மாவை புளிக்க வைப்பதுபோல் செய்ய வேண்டும்.உப்பு போட வேண்டாம்.

காலையில் ஒரு பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் விட்டு சூடேற்றவும்.

அது கொதி வருவதற்குள் கம்பு மாவில் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து வைக்கவும்.

தண்ணீர் கொதி வந்ததும் கம்பு மாவை ஊற்றிக் கட்டிகளில்லாமல் கிண்டிவிடவும்.அடியில் பிடிக்காமலும்,கட்டி விழாமலும் தடுக்க அடிக்கடி கிண்டிவிட வேண்டும்.

சிறிது நேரத்தில்  கம்புமாவு பொங்கி வரும்.அப்போது கேழ்வரகு மாவைக் கரைத்து ஊற்றவும்.தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளவும்.மீண்டும் கட்டிகள் வராதவாறு விடாமல் கிண்டவேண்டும்.

ஒரு 5 நிமி கழித்து தீயை மிதமாக்கி மூடி மேலும் ஒரு 5 நிமி வைக்கவும். இப்போது  இரண்டு மாவும் கலந்து கொதித்தபிறகு நல்ல வாசனை வரும். கெட்டியாகவும் இருக்கும்.

விருப்பப்படி சூடாகவோ அல்லது ஆறியபிறகோ  சாப்பிடலாம்.ஒன்று செய்யலாம்.குளிர் காலத்தில் சூடாகவும் கோடையில் ஆற வைத்தும் சாப்பிடலாம்.

இதனை சாதம்போல் வைத்து எந்தக் குழம்புடனும் சாப்பிடலாம்.அல்லது சிறிது தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல் வகைகள், ஊறுகாய் வகைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். நல்ல சத்தானதும்கூட

இவை அனைத்தையும் பானையில் செய்தால் சிறப்பு சுவையும் அதிகரிக்கும்…!

இவ்வளவு நாள் பானை இல்லை என்றால் கூழ் செய்வதற்காவது பானை வாங்குங்கள்  குயவர்கள் வாழட்டும்.…!

நன்றி வணக்கம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.