இந்த மேட்டூர் அணைப்பற்றி எவ்வளவு பேருக்கு தெரியும்னு சரியாக தெரியலைங்க..!

0 1,407

மேட்டூர் அணை காமராஜரால் கட்டப்பட்டது என்றும் விவாதம் செய்கிற நட்புகளும் இருக்காங்க.
அவர்களுக்கும் , மேட்டூரை ப்போல பிறிதொரு அணை கட்டவில்லை என்று புலம்பும் நட்புகளுக்கும்..

மேட்டூரை பற்றி விளக்கம் இது.

பதிவிற்குள் போவதற்கு முன் ஒரே ஒரு விளக்கம்…
ஒரு பவுன் நகையின் இன்றைய விலை சுமார் 26000 ₹.ஒரு ஏக்கர் நிலம் குறைந்தது பத்து இருபது லட்சம் முதல் கோடிகள் வரை..
இன்றைய ஜனத்தொகை தமிழகத்தில் ஏறத்தாழ ஏழரை கோடி
இந்தியாவில் நூற்றி இருபது கோடி..
என  இன்றைய நிலவரங்களை கருத்தில் கொண்டு மேட்டூருக்குள் செல்வோம் வாருங்கள்….
.மேட்டூரில் முதல்முதலாக அணை கட்ட திட்டமிடப்பட்டது கி.பி 1834.
அந்த முதல் திட்டத்தில் பல விபரங்கள் முழுமையாக இல்லாததால் இருபது ஆண்டுகள் கழித்து 1856 ல் இரண்டாவது திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டம் இப்போதுள்ள அணைக்கு கீழே 11 மைல் தொலைவில் நெரிஞ்சிப்பேட்டை என்ற இடத்தில் கட்ட திட்டமிடப்பட்டது.

அதுவும் நிறைவேறவில்லை. பின் 1869 ஆண்டிலும் , 1892 ம் ஆண்டிலும் மேலும் விபரங்களுடன் திட்டம் மெருகேறி இறுதியாக 1901 ல் முழுமையான திட்ட அறிக்கை தயாரானது. இந்த திட்டத்திற்கு சென்னை ராஜ்தானி அரசு..
அரசாணை என் 971 / 1 நாள் 02 / 09 / 1904 ல் அனுமதி வழங்கியது. இதற்கான திட்ட செலவாக 292.75 லட்சம் என நிதி செலவு ஒப்புக்கொள்ளப்பட்டது. அன்றைய நாள்களில் ஒரு பவுன் விலை
ரூ 18 முதல் 20 என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பின் மழைக்காலத்தில் மேலும் வரும் நீரையும் அணைக்கு பாதிப்பில்லாத வகையில் வெளியேற்ற கட்டளை கால்வாய் திட்டங்களும் இணைக்கப்பட்டு 1910 ல் திட்ட செலவு 385. 24 லட்சம் என இறுதியாகி
சேலம் மாவட்டம் கீதாமலை — பாலமலை இடையே அணைகட்ட இறுதி ஆணை வெளியிடப்பட்டது.

அதன்பின் நில ஆர்ஜிதங்கள் துவங்கியது.
நில ஆர்ஜித விபரங்கள்…
1) அரசின் நேரடி நிலம் 95983 ஏக்கர் // ஒரு ஏக்கர் விலை 8.00 ரூ. ஆம் வெறும் எட்டு ரூபாய் என நிர்ணயம் செய்து நிதி ஒதுக்கப்பட்டது.
2) ஜமீன்தாரி / இனாம் வாரி நிலங்கள் 98423 ஏக்கர். விலை 8/ ஏக்கர்.
3) தனியார் விவசாய நிலங்கள் 62,632 ஏக்கர்கள் . விலை 5/ ஏக்கர்.
4) அரசு சுவாதனத்திலிருந்த பல்வகை நிலங்கள் 16,230 ஏக்கர்.
5) விவசாயமற்ற தனியார் நிலங்கள் 1,768 ஏக்கர்.

அடுத்து நீர்வடியும் பகுதியாக சேலம் மாவட்ட எல்லையில் 7,409 ஏக்கர் நிலங்களும்
கோவை மாவட்ட எல்லையில் 11,462 ஏக்கர் நிலங்கள் என அரசாணை எண் 196/ 1 நாள் 02 /05/ 1925 ல் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.

இது தவிர 14,146 வீடுகள் ஆர்ஜிதம் செய்யப்பட்டு அந்த கிராம மக்கள் புலம் பெயர வைக்கப்பட்டார்கள்.
அணையில் நீர் தேங்கும் பகுதி மட்டும் 59.47 சதுர மைல்கள் ஆகும்.
பின் இறுதியாக 20 / 07 / 1925 ல் மேட்டூர் அணை கட்டும்பணி முறைப்படி துவங்கப்பட்டது
பின் நாம் கனவிலும் நினைக்க இயலாத உழைப்பால் ஒன்பது ஆண்டுகள் பணி நடந்தது. இதற்காக இரண்டு கற்பாறை மலைகள் முழுவதுமாக உடைக்கப்பட்டு தேவையான கற்கள் பெறப்பட்டது.
இதற்காக தனி ரயில்வே பாதை..
சாலைகள் , எல்லாம் உருவாக்கப்பட்டது.
பின் கடினமான ஒன்பது ஆண்டுகால உழைப்பாலும்..
அப்போதய சென்னை மாகாண கவர்னர் திரு. ஜார்ஜ் ஸ்டான்லி அவர்களின் ஒத்துழைப்பாலும் வெற்றிகரமாக கட்டப்பட்டு21 / 08 / 1934 ல்
சென்னை மாகான கவர்னர் ஜார்ஜ் ஸ்டான்லி அவர்களால் திறக்கப்பட்டது.
அந்த கவர்னரின் பெயரால் அந்த நீர்தேக்கம் ஸ்டான்லி நீர்தேக்கம் என்று பெயரிடப்பட்டது.
சென்னை மருத்துவமனைக்கும் ஸ்டான்லி ஹாஸ்பிட்டல் என பிற்காலத்தில் பெயரிடப்பட்டது.

இது இந்த பதிவு ஒரு பெரிய அணை கட்ட ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் மக்களை புலம்பெயர வைக்கும் பணிகள் உள்பட உள்ள எதார்த்த சிக்கல்களை விளக்கவே என்பதால்
இதர பல்வேறு விபரங்கள் இணைக்கப்படவில்லை.
தற்போதய நாட்களில் இது போல அணை கட்ட இடமும் இல்லை என்பதைவிட ஆட்சியாளர்கள் இல்லை என்பதே உண்மை
நிர்வாக சாத்தியமும் இல்லை என்பதை இதன் மூலம் உணரலாம்….

உங்கள் சகோதரி… ஷர்மி.

You might also like

Leave A Reply

Your email address will not be published.