விளையாட்டு நிலத்திற்கு முதன்முறையாக என்எஸ்ஜி பாதுகாப்பு..!

0 414

உண்மையில் விவசாயநிலங்கள் அழிக்கப்படுகிறது விளையாட்டு மைதானாங்கள் 7 அடுக்கு பாதுகாப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்துக்கு முதன்முறையாக தேசிய பாதுகாப்புப் படை (NSG) பாதுகாப்புப் போடப்படுகிறது.

பதினோறாவது ஐபிஎல் மும்பையில் இன்று தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் சென்னை- மும்பை அணிகள் இன்று மோதுகின்றன.

இந்நிலையில் ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு தேசிய பாதுகாப்புப் படை பாதுகாப்பில் ஈடுபட உள்ளது. நாளை முதல் மே 19-ம் தேதிவரை இந்தப்படை பாதுகாப்பில் ஈடுபடும். அதோடு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு படையினரும் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.

ஐதராபாத் மைதானத்தில் மொத்தம் ஏழு போட்டிகள் நடக்க உள்ளன. இங்கு கடந்த முறை 1800 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடப்பட்டிருந்தனர். இந்த முறை 2,500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். 5 தீயணைப்பு வாகனங்களும் 8 அம்புலன்ஸ்களும் இங்கு நிறுத்தப்படும். இந்த ஏற்பாடுகளை ரச்சகொண்டா கமிஷனர் மகேஷ் பகவத் நேற்று பார்வையிட்டார்.
போலீஸ்காரர்களுக்கு தேவையான இருக்கை மற்றும் தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுக்குமாறு ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மற்றும் ஐதராபாத் சன் ரைஸ் அணிக்கு போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர்.
38 ஆயிரம் பேர் அமரும் வகையிலான இந்த மைதானத்தில் நுறு சிசிடிவி கேமரா பொருத்தப்பட இருக்கிறது. இதைக் கண்காணிக்க, கன்ட்ரோல் ரூம் ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது.

ஆற்றில் மணலும் விளை நிலத்தில் மீத்தேனும் மலையில் நீயூட்ரினோ எடுக்கும் இதற்கு விவசாயிக்கு எந்த பாதுகாப்பு அளித்தார்கள்..?

இது விவசாயநாடுதானா..?

You might also like

Leave A Reply

Your email address will not be published.