ஒருவேளை இந்த சம்பவத்தில் நீங்கள் தலையிட்டிருந்தால் என்ன செய்வீர்கள்..?

0 352

என் குழந்தை பருவத்தில் இருந்து இந்த மே மாதம் வந்தாலே கொட்டை முந்திரி நுங்கு தர்பூசணி,வெள்ளரி சாப்பிட்டு பழக்கம்

கிராமத்தில் பொரும்பாலும் இதனை பயிர் செய்வதும் வழக்கம்..!

 

காலங்கள் மாற மாற அனைத்தும் மாற துவங்கியது விதையில்லா பழம் விதையில்லா மரம் என அத்தனையையும் விவசாய கல்லூரிகள் மாற்ற தொடங்கியது..! இவையெல்லாம் தெரியாமல் விவசாயத்தை காப்பபாற்ற போவதாக எண்ணி நானும் அந்த தமிழ்நாடு வேளாண்மை கல்லூரியில் படிப்பை தெடங்கினோன்..!

என் தாத்தன் பாட்டி செய்த விவசாயத்தை விட வேளாண்மை கல்லூரிகள் அதிகம் அறுவடை செய்தது என்பது மறுக்க முடியாத உண்மை..! பயிர்களை அல்ல பணத்தை..!

விவசாயம் படித்தால் விவசாயியை தவிர அனைத்து ஆளுமை வேலைக்கும் செல்லாம் என்ற மாயை தொடங்கியது..! விதைகள் அழியவும் தொடங்கியது

கல்லூரி முடித்த பின்பு விவசாயத்தை தவிர அனைத்தும் போட்டி போட்டது வேலையில் ஆள் எடுக்க விதை நிறுவனம் உர நிறுவனம் வங்கி வேலை என்று அனைத்தும் என்னை பணம் எனும் காகித்தால் கட்டிபோட்டது

சரி பழமைக்கு வருவோம் இன்று காலை 6_7 வயது மூன்று சிறுவர்கள் தோட்டத்தை நோக்கி வந்தார்கள் அண்ணா முந்திரி பழம் உள்ளதா என்று கேட்டவுடன் மரத்தில் உள்ளதை பறித்து சாப்பிட்டு போங்கடா என்று அமர்ந்தேன்..! உடனே எவ்வளவு ரூபாய் என்று கேட்டார்கள் பணமெல்லாம் வேணாம் பறிச்சி சாப்பிட்டு போங்கடா என்றேன்
காரணம் குழந்தையில் இதே முந்திரியை பணமில்லாமல் திருடி அடிவாங்கி ஞாபகம்..!

தேவையான பழத்தை பறித்துவிட்டு ஒரு சிறுவன் குசுகுசுவென காச குடுத்துட்டு வாட போகலாம் என்றான்..! அது என்காதிலும் கேட்டது..!

தோட்டத்தை விட்டு 1/2 கி.மீ கடந்து போய்விட்டார்கள் நானும் வந்து தென்னை மரத்தடியில் அமர்ந்து விட்டேன்..! ஒரு சிறுவன் வேகமாக ஒடிவந்தான் இந்தாங்க 10 ரூபாய் என்று கொடுத்துவிட்டு வேகமாக நடந்தான்..!

இதெல்லாம் ஒரு பதிவா அப்புடின்னு நினைசச்சாலும் பரவாஇல்ல.!

அவன் நினைத்திருந்தால் அந்த பத்து ரூபாயை வைத்து வேறு செலவு செய்திருக்கலாம்..!

 

ஒருவேளை காசு கொடுத்துட்டு பழம் பறிச்சிட்டு போங்கடா அப்புடின்னு சொல்லி இருந்தால் என் மேல் அவனுக்கு மதிப்பு வராமல் பிறகு திட்டிவிட்டு சென்றிருக்கலாம்…!

வாங்கிய எனக்கு 10 ரூபாய் பெரிதல்ல ஆனால் கொடுத்த அவனுக்கு நிச்சயம் அவை பெரிய தொகையே…!

You might also like

Leave A Reply

Your email address will not be published.