நெடுஞ்சாலை பயணம் லாரிகளின் அணிவகுப்பு கழுகின் போராட்டாம்..!

0 3,301

மதுரை _ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 70 km வேகத்தில் என் பயணம் தொடர்ந்தது எனக்கு முன்னே ஒரு லாரி அதிவேகமாக பயணித்தது..!

சிறிது தூர பயணம் அந்த லாரியை பின்தொடர்ந்தேன் வேகமாக சென்ற லாரி திடிரென வேகம் குறைந்தது காரணம் மயிர்கள் கொட்டிய நிலையில் மறுபிறவிக்கா ஒரு கழுகு ஒன்று நடுரோட்டில் நின்றது அவர் நினைத்திருந்தால் ஒரு நொடியில் அதனை கொண்றுவிட்டு சென்றிருக்கலாம் ஆனால் லாரியை இன்டிகேட் போட்டு நிறுத்திவிட்டு அந்த கழுகை எடுத்து சாலைக்கு அந்த புறம் உள்ள வயல்காட்டில் விட்டுவிட்டார்..

மரணத்தைதாண்டியும் வாழ்கையா..?

கழுகாரைப் பற்றி நமக்கு என்ன தெரியும் அதிகபட்சம்? எனக்கு தெரிந்ததெல்லாம், “கழுகைப் போன்ற பார்வை வேண்டும்”, பிறகு “உயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகாது” அப்படிங்கிற பழமொழிகள்தான்.

பறவை இனங்களிலே அதிக வருடங்கள் வாழக்கூடியது கழுகு மட்டுமே..அதாவது 70 வருடங்கள் வாழக்கூடிய திறன் கொண்டது கழுகு! ஏன் திறன் கொண்டது எனச் சொல்கிறேன் தெரியுமா? அதுதான் இந்தப் பதிவின் சாராம்சமே! மேலே படித்தால் உங்களுக்கே புரியும்.

என்னதான் கழுகுக்கு 70 வருட கால வாழ்க்கை சாத்தியமென்றபோதும் அது ஒன்றும் அத்துனை எளிதானதல்ல! அதாவது 70 வருட வாழ்க்கை என்பது ஒவ்வொறு கழுகும் எடுக்கும் ஒரு அதி முக்கியமான முடிவைப் பொருத்தது! என்ன புரியவில்லையா? அதாவது வாழ்வா சாவா எனும் ஒரு இக்கட்டான சூழ் நிலையின்போது நாம் எடுப்போமல்லவா ஒரு தீர்க்கமான முடிவு, அத்தகைய ஒரு முடிவை ஒவ்வொறு கழுகும் தன் 40-வது வயதில் எடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தம்!

தன்னுடைய 40 வது வயதில் இரையை கொத்தி தின்னும் அலகுகள் மழுங்கி போய் மிகவும் வளைந்து விடுகின்றன.

வயதாகி போன நீண்ட தடிமனான இறகுகள் நெஞ்சில் குத்திக்கொண்டு பறப்பதற்கு இடையூறாகின்றன.

இந்நிலையில் தான் கழுகிற்கு மடிவதா..இல்லை மிகவும் துன்பம் தரக்கூடிய நீண்டகால(150 நாட்கள்) மாற்றம் ஒன்றை ஏற்றுக்கொண்டு..பின் அடுத்த 30 வருடகால மீதி வாழ்க்கையை ஏற்றுவாழ்வதா? எனும் முடிவை எடுக்க தயாராகின்றன

அந்த வாழ்வா? சாவா? மாற்றத்தின் பகுதிகளான….

பாறையில் சென்று தன் அலகினை(வாய்,மூக்கு) பாறையில் இடித்து இடித்து பிடிங்கி எறிவது..

பின் அலகுகள் வளரும் வரை பொறுத்திருந்து தன் கால் நகங்களையும் அலகினை போலவே பிடுங்கி எறிவதுபின் நகங்கள் வளரும் வரை காத்திருந்து தன் சிறகின் வலுவற்ற இறகுகளை பிடுங்கி எறிவது

இவையெல்லாம் நடந்தேற 5 மாதங்கள்(150 நாட்கள்) ஆகின்றன.

பின் தன் பிரம்மாண்டமான சிறகுகளை விரித்து புத்துணர்ச்சியுடன் பறந்து மீதமுள்ள 30 ஆண்டு கால வாழ்க்கையை கழிக்கிறது கழுகு.வாழ்வில் சில சமயங்களில், துன்பம் தரக்கூடிய, மிகவும் வலிகளுடன் கூடிய சில மாற்றங்களை நாம் மேற்கொண்டே ஆக வேண்டும்!

நாம் சில சமயங்களில் நமது பழைய நியாபகங்கள், பழக்க வழக்கங்கள், பாரம்பரிய செயல்பாடுகள் போன்றவற்றை துறக்க வேண்டும்!

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவன கால வகையினானே” எனும் வள்ளுவரின் கூற்றுக்கிணங்க வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளுதல் அவசியமாகிறது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.