அவர்களின் காலத்தின் நீர் பங்கீட்டை பாருங்கள் கல்வெட்டில் தெளிவாக உள்ளது..!குமிழிமடை கல்வெட்டு

0 293

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கீரமங்கலத்தை அடுத்த சேந்தன்குடி பெரியாத்தாள் ஊருணியில் உள்ள 1808 ஆம் ஆண்டைச் சோ்ந்த குமிழி மடை கல்வெட்டு .புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தால் படித்து பதிப்பித்து வெளிவந்துள்ளது.  அதில் 200 க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் நீா்ப்பாசனம் தொடா்பான கல்வெட்டுகளாக இடம் பெற்றுள்ளன.  இதுவரை 30க்கும் மேற்பட்ட குமிழி மடைகளில் நீா்ப்பாசனம், மடை, மற்றும் விளைநிலங்கள் தொடா்பான கல்வெட்டுகள் நமக்குக்கிடைக்கின்றன.
பொதுவாக மழைக்காலங்களில் நீா் பெருக்கெடுத்து ஓடி வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் ஆறுகள் மட்டுமே இம் மாவட்டத்தில் உள்ளன.  எனினும் அதிகப்படியான குளங்கள், ஏரிகள் மற்றும் கண்மாய்களும் கொண்ட இந்த மாவட்டத்தில் சங்கிலித் தொடராய் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கடலில் கலக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது.

இந்த நீா்நிலைகளை சுற்றியுள்ள விளை நிலங்களுக்கும் குமிழி மடையின் மூலமாக பாசண நீா் வெளிச்செல்ல அமைக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம். பொதுவாக நீா்ப்பாசணம் தொடா்புடைய கல்வெட்டுகளில் நீா் நிலைகளின் பெயா்களும், நீா் பகிர்வது தொடா்பான செய்திகளும் நீா் முறைகள் அதாவது முறைவைத்து நீா் பாய்ச்சும் செய்திகளும், நீா் பகிர்ந்தளிப்பதும் அதனை மேலாண்மை செய்வதெற்கென தலைவா்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் பராமரிப்பபு செய்வது, பராமரிப்பு செய்தவா்களுக்கு குலப்படி எனும் ஒரு குறிப்பிட்ட நிலமும், தாணியமும் வழங்கப்பட்ட செய்திகள் இடம் பெற்றுள்ளன.  மடை திறக்கும்போது நீரில் மூழ்கி இறந்தவனுக்காக நினைவுக்கல் வைத்த செய்தியும் இடம்பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் கல்வெட்டில் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு நீா்ப்பாசணத்தால் பயனடைந்த நிலங்கள் எவை, எவை என தெரிந்து கொள்ளும் வகையிலும் கல்வெட்டுகள் பொதுவாக இதுவரை நமக்கு கிடைக்கிறது.
சேந்தங்குடி பெரியாத்தாள் ஊரணியில் இந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.  இதில் ஊரணியின் பெயா் அப்போது இடும்பன் நதிக்கண்மாய் என்று இடம் பெற்றுள்ளது.
இந்த ஊரணிக்கு அம்புலியாற்றிலிருந்து  வெளிவரும் உபரி நீரை அன்னதான காவேரி எனும் வழி ஏற்படுத்தி அதிலிருந்து வந்தடைந்த நீரானது பாசண நிலங்களுக்கும் சென்றடையும் வகையில் இந்த மடை அமையப்பெற்றுள்ளது.  இதில் கொள்ளளவு எட்டிய காலங்களில் அடுத்தடுத்த குளங்களுக்கு சங்கிலித் தொடராய் சென்று குலமங்கலத்திற்கு அருகே செல்லும் வில்லுணி ஆற்றுடன் இணைகிறது.  கல்வெட்டு கண்டறியப்பட்ட குமிழி மடையானது நான்கு மடைகளைக் கொண்டுள்ள இந்த ஊருணியில் முதல் மடையில் உள்ளது.  இதிலிருந்து வெளிவரும் நீா் ஊருணியின்  வடக்கே உள்ள விளைநிலங்களுக்கு பாயும் வகையில் அமைந்துள்ளது.
சாலிவாகன சகாப்த ஆண்டாக 1730— ம்  கலியுக ஆண்டாக 4909— ம்  விபவ வருசம் ஆடி மாதம் 23-ந்தேதி சுக்கிர வாரம் உத்திராட நட்சத்திரத்தில்  கூடிய சுபதினத்தில் தனுசு லக்கனத்தில் தென்சோரை வளநாட்டிற்கு உட்பட்ட தென்தானவ நாட்டை சேர்ந்த ஜெயநகரத்தில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணியா் சுவாமி  கோயிலால் இந்த இடும்பன் நதிக் கண்மாய்க்கு மடை அமைக்கப்பட்ட செய்தியானது இடம் பெற்றுள்ளது.
இதுவரை தானவ நாடு என்ற செய்தியானது கீரமங்கலம் சிவன்கோயில் கல்வெட்டிலும், கண்டியூர் சங்மங்கலம் கல்வெட்டிலும் மற்றும் குளமங்களத்தில் உள்ள ஒரு துண்டுக் கல்வெட்டிலும் இடம் பெற்றுள்ளது. தற்போது கிடைத்த கல்வெட்டில் நான்காவதாக தானவநாடு எனும்  நாட்டுப்பிரிவு இடம் பெற்றுள்ளது.  இது இச்சிறு நாட்டின் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே செல்லும் வகையில் உதவியாக உள்ளது.
இடும்பண் நதிக்கண்மாய் ஒரு காலத்தில் நகரத்திற்கும், சேர்ந்தன்குடிக்கும் நீா் ஆதாரமாகவும் விளை நிலங்களுக்கு நீர்ப்பாசனத்திற்காகவும் பெரிதும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிய வருகிறது.
தற்போது உள்ள நகரம் வெற்றியின் அடையாளமாக விஜயநகரம் என உருவாக்கப்பட்டு அங்குள்ள பாலசுப்பிரமணியா் கோயிலால் மடை அமைக்கப்பட்டுள்ளதும் இங்குள்ள இடும்பன் சுவாமியின் பெயராலேயே இக்கண்மாய்கு இடும்ப நதிக்கண்மாய் என பெயரிட்டதும் தெரிய வருகிறது.   
இங்குள்ள இடும்பன் சிலையானது சுப்பிரமணியா் கோயிலுக்கு வடபுறம் தனி சன்னிதியில் உள்ளது.  தோளில் தடியை வைத்து இருபுறமும் சிவ மலையை உறியாகக் கட்டி காவடியை போல் சுமந்து நிற்கும் இந்தச் சிலை எவ்வாறு பழனி மலை உருவாகக் காரணமாக இருந்ததோ அதேபோன்று நகரம் சுப்பிரமணியா் கோயில் உருவாகக் காரணமாகவும் அமைந்திருக்கலாம். பழனியில் ஓடும் இடும்பன் நதியைப் போல் இங்குள்ள கண்மாய்க்கு இடும்ப நதிக்கண்மாய் என பெயரிட்டிருப்பது கல்வெட்டில் அறியும் ஒரு சிறப்பம்சமாகும்.
இதுவரை பாலசுப்பிரமணியா் கோயிலுக்கென கல்வெட்டுக்கள் இல்லாத நிலையில் இந்த கல்வெட்டு சிறப்பினை பெறுகிறது. மேலும் நகரம் பாலசுப்பிரமணியா் கோயிலின் விதாணத்தில் தற்போது பார்த்ததில் ஒரு சில இடங்களில் எழுத்துகள் தெண்படுகிறது.  இதனைத் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.