சித்ரா த ற் கொ லை வழக்கு விசாரணையில் அதிரடி காட்டிய திவ்யாஸ்ரீ என்ற பெண்! அவர் வெளியிட்டுள்ள தகவல்

0 1,056

சித்ரா த ற் கொ லை வழக்கில் இறுதி கட்டமாக அவருடன் தொடர்ந்து பயணித்த உதவியாளர் ஆனந்தனிடம் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ 2 மணி நேரம் தனியாக விசாரணை நடத்திய நிலையில் விசாரணை முடிவுக்கு வந்தது.சின்னத்திரை நடிகை சித்ரா, செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் சில நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேமந்த் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் 6-ம் நாள் விசாரணைக்கு பின் கடந்த 14ம் திகதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.சித்ரா தற்கொலை குறித்து காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஒ. திவ்யஸ்ரீ விசாரணை செய்து வந்தார். சித்ராவின் தாய், தந்தை, சகோதரி, சகோதரர், மற்றும் ஹேமந்தின் தாய், தந்தை அகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில் சித்ராவின் கணவர் ஹேமந்திடமும் அதிரடியாக விசாரணை நடத்தினார்.

3 கட்டமாக நடத்திய விசாரணைக்கு பிறகு சித்ராவின் உடன் நெருங்கிய வட்டாரங்களில் விசாரிக்க முடிவு செய்து சித்ரா தற்கொலை செய்து கொண்ட விடுதியின் ஊழியர்கள், அவருடன் கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள்,

சித்ராவின் வீட்டின் அருகில் வசிப்பார்கள் மற்றும் சித்ராவுக்கு நெருக்கமானவர்களிடம் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார்.இந்தநிலையில் ஆர்.டி.ஓ., திவ்யஸ்ரீ இறுதி கட்டமாக சித்ராவின் உதவியாளர் ஆனந்தனிடம் நேற்று விசாரணை நடத்தினார்.

சுமார் 2 மணிநேரமாக ஆனந்தனிடம் விசாரணை நடத்தினார். இத்துடன் விசாரணை முடிந்தது.இது குறித்து திவ்யாஸ்ரீ கூறுகையில், சித்ராவின் வழக்கு விசாரணை முடிந்தது, இந்த விசாரணை அறிக்கையை தயார் செய்து விரைவில் பூந்தமல்லி பொலிஸ் உதவி கமிஷனரிடம் வழங்க முடிவு செய்து உள்ளதாக கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.