பரோட்டா சூரி போல் ஆக முயற்சித்த இளைஞர்… 42வது முட்டையை சாப்பிட்டபோது நிகழ்ந்த பரிதாபம்..!

0 1,222

நகைச்சுவை நடிகர் சூரியின் அடையாளமே அவரது முதல்படமான வெண்ணிலா கபடிக்குழுவின் அவர் சாப்பிடும் பரோட்டா தான். அதில் 50 பரோட்டாக்களை சாப்பிட்டு விட்டு இல்லைன்னா எல்லாக் கோட்டையும் அழி.நான் முதலில் இருந்தே சாப்பிடுகேன்னு கேஸ்வலாக சொல்லுவார். அதேபோல் 50 முட்டைகளை சாப்பிடுவதாக பந்தயம்கட்டிய வாலிபர் பரிதாபமாக உயிர் இழந்தார்உத்திரப்பிரதேச மாநிலம் ஜோன்பூர் பகுதியை சேர்ந்த சுபாஸ் டிராக்டர் ஓட்டுனர். அவரது நண்பர்கள் 50 முட்டை சாப்பிட்டு ஒரு பாட்டில் மதுவும் குடித்தால் 2000 ரூபாய் பணம் தருவதாக பந்தயம் கட்டினார்கள். சுபாஸ்ம் அதற்கு சம்மதித்தார்.

பரோட்டா சூரியைப் போல் விறுவிறுவென முட்டையை சாப்பிட்டுக் கொண்டே இருந்தார். 42வது முட்டையை சாப்பிடும்போது திடீரென மயங்கி விழுந்தார் சுபாஸ். முதலில் லோக்கலில் இருந்த ஆஸ்பத்திரிக்கு அவரது நண்பர்கள் கொண்டு சென்றார்கள்.

தொடர்ந்து அங்கிருந்து, சீரியஸாக இருப்பதாக லக்னோவில் உள்ள சஞ்சய்காந்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். ஆனால் சிகிட்சை பலனின்றி சுபாஸ் பரிதாபமாக உ யி ர் இ ழ ந் தார்.ஏற்கனவே ஒரு பெண்ணோடு திருமணம் முடிந்திருந்த சுபாஸ்க்கு நான்கு பெண்குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஆனால் தனக்கு ஆண்வாரிசு இல்லை என்பதால் இரண்டாவதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்தார் சுபாஸ். அந்த பெண் இப்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் பிறக்கப் போவது ஆணா? பெண்ணா? என அறியாமலேயே முட்டை சாப்பிடும் போட்டியில் உயிரை விட்டிருக்கிறார் சுபாஸ்.

.

You might also like

Leave A Reply

Your email address will not be published.