உலக சாதனை படைத்த 9 வயது தமிழ் சிறுமி உணவின் பெரும் பங்கு விவசாயம்தான் மக்களே விவசாயத்தை காப்போம் !!

0 250

சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஒரு மணிநேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து யூனிகோ உலக சாதனையை படைத்துள்ளார்.ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியான லட்சுமி சாய் ஸ்ரீ (9 வயது) ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகளில் கல்வி பயின்று வந்துள்ளார்.இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் ஓய்வு நேரங்களில் தாயுடன் இணைந்து சமையலுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வந்த லட்சுமி அதன் பின் அதன் மீது அதிக அளவு நாட்டம் கொண்டு உணவுகளை சமைக்க தொடங்கியுள்ளார்.இவரின் ஆர்வத்தை பார்த்த தாயார் கலைமகள் யுனிகோ சாதனை முயற்சியில் ஈடுபடுத்த வழிநடத்தியுள்ளார்.

இதற்கமைய சென்னையில் நடைபெற்ற போட்டியில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளான கம்பு தோசை, கேழ்வரகு இட்லி, கேழ்வரகு புட்டு, சிறு தானியங்கள், மீன் வருவல், இறால் வறுவல், சிக்கன் 65 என்று அந்த அரங்கத்தையே நறுமணத்தால் ஈர்த்து விருந்து படைத்துள்ளார்.

லட்சுமி ஒரு மணிநேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார். இதனை பார்த்த பலர் இவரை பாராட்டி வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.