சாப்பாட்டை வீணாக்குபவரா நீங்கள்? நிச்சயம் இதைப் பாருங்க… நெஞ்சை உருகவைக்கும் பதிவு..!

0 205

சாப்பாடு இல்லாமல் எந்த மனிதனாலும் வாழ முடியாது. ஏன் காட்டுக்குள் மிருகங்கள் கூட வேட்டையாடி உண்பது சாப்பாடு என்னும் ஒரு விசயத்துக்காகத் தானே?ஆனால் நம்மில் பலருக்கும் உணவின் அருமை தெரிவதில்லை. தேவைக்கு அதிகமாகவே தட்டில் உணவை பெற்றுக்கொண்டு கடைசியில் குப்பைத்தொட்டியில் போய்க் கொட்டுவது, அல்லது மீதச்சாப்பை எங்கோ தூக்கி வீசுவது என பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்முடைய சின்ன வயதில் ஒரு வள்ளுவர் கதை கேள்விப்பட்டிருப்போம். வள்ளுவர் தினமும் சாப்பிட உட்காரும்போது அவரது மனைவி வாசுகியிடம் ஒரு ஊசியும் பக்கத்தில் வைக்கச் சொல்வாராம். கடைசி தருணத்தில் வாசுகி அதற்கான காரணம் கேட்டாராம். அப்போது வள்ளுவர், ‘’ஒரு வேளை சோற்றுப்பருக்கைகள் சிந்திவிட்டால் அதை அந்த ஊசியில் குத்தி எடுத்து, கப்பில் இருக்கும்

தண்ணீரில் நனைத்து சாப்பிடுவேன்..’’என்றாராம்.ஆனால் கடைசிவரையில் வள்ளுவர் ஒரு பருக்கை சோற்றைக் கூட சிந்தவில்லை. அதனால் தான் வாசுகிக்கு ஏன் ஊசி தேவைப்பட்டது என்றே தெரியவில்லை. இது ஒருபுறம் இருக்க நம்மில் பலரும் உணவை ரொம்பவே அலட்சியமாக மீதம் வந்ததை தூக்கி வீசுகிறோம். இதோ இந்தக் காட்சி அவர்களுக்கானதுதான்.

கீழே கிடக்கும் உணவை எடுத்து ரயில்வே ஸ்டேசன் பைப்பில் கழுவிச் சாப்பிடுகிறார் ஒரு பெரியவர். இதோ இந்த காட்சிகளைப் பாருங்கள். இனி நீங்களும் உணவை தூக்கிவீச மாட்டீர்கள். நெஞ்சை உருக்கும் காணொளி.

You might also like

Leave A Reply

Your email address will not be published.