பசியால் உடைந்து உருகும் வீடீயோ… உணவை வீணாக்கும்முன் இதைப்பார்த்து யோசிங்க…

0 198

ஒரு பக்கம் பசியால் பலர் துடித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கத்தில் உணவை வசதியானவர்கள் அதன் அருமை தெரியாமல் வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை உள்பொருளாக பொதிந்து விளக்கும் வீடீயோ இன்று சமூகவளைதளங்களில் உலா வருகிறது.உணவு, உடை, உறைவிடம் இது மூன்றும் தான் தனி மனிதனின் அடிப்படைத் தேவைகள். அதில் உணவு கிடைக்காவிட்டால் வாழ்வே முடிந்து விடும். அதனால் தான் பாரதியார், தனியொருவனுக்கு உணவு இல்லையென்றால் ஜெகத்தினை அழித்து விடுவோம் என்று சொன்னார். அண்மையில் கேரள மாநிலம், அட்டப்பாடியில் பசியால் கொஞ்சம் அரிசியை ஒரு கடையில் இருந்து எடுத்து வந்த பழங்குடி இளைஞர் மது என்பவரை அடித்தே கொன்றனர் மக்கள்.

இதுவும் நாடு முழுவதும் பசித்த வயிறின் வலியைப் பேசியது.இங்கேயும் அப்படித்தான் ஒருவர் கடுமையான பசியோடு பலரிடமும் உணவுக்காக கை ஏந்துகிறார். ஆனால் யாரும் சட்டை செய்யவில்லை. இந்நிலையில் ஒரு குடும்பம் அவருக்கு சாப்பாடு கொடுக்கிறது. அதை சாப்பிட்டுக் கொண்டே பசியால் துடிதுடித்து அலைந்தவர், ‘’ நல்லா இருப்படா வாழ்க்கையில் நல்லா இருப்படா..அங்க இருந்து பத்து பேருகிட்ட கேட்டேன். யாருமே எனக்கு வாங்கிக் கொடுக்கல சாமி…என்று அழுகிறார்..

உடனே அழுகாதே.அழுகாதே சாப்பிடு என்கிறது அந்த குடும்பம். இந்த சாப்பாடு பத்தாட்டியும் இன்னும் கேளு கொடுப்பாங்க. ”என்று ஆறுதல் படுத்துகிறது.உடனே, ‘’நடந்தே வந்தேன் எனக்கு பசிக்குது’’. என்றவாறே வேகமாக சாப்பிடுகிறார்.வேண்ணா இன்னும் கொஞ்சம் வாங்கிச் சாப்பிடு. குழம்பு வேண்ணா உத்திக்க…என்று கருணை காட்டுகிறது அந்த குடும்பம்.

திருமண வீடுகளிலும், உணவகங்களிலும் பேஷன் என நினைத்து பாதியில் எழுந்திரித்து உணவை விரயம் செய்பவர்களும், உணவின் மதிப்பு தெரியாதவர்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய அழுகுரல் வீடீயோ இது.வீடீயோவை கீழே பாருங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.