திரைப்பட ரீல் ஹீரோக்கள் vs ரியல் லைப் ஹீரோக்கள்- கடைசில இப்படி ஒரு ட்விஸ்ட் வைப்பாங்கனு எதிர் பார்க்கல!!

0 157

தமிழ் சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்கள் கற்பனை கதை என்றாலும் ஒரு சில திரைப்படங்கள் சாதாரண மனிதன் ஒருவரின் வாழ்கை கதையாக கூட இருக்கலாம். அப்படி மக்களின் மனதை தொட்ட திரைப்படங்கள் ஏராளம். ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் விழிப்புணர்வு செய்ய எடுக்கவோ அல்லது மற்றவர்கள் அந்த வகையான வழியில் செல்லனும் அல்லது செல்லக்கூடாது என வழிமுறையை வகுக்கும் படமாகவோ இந்த மாதிரியான திரைப்படங்கள் இருக்கும். சில நேரங்களில் நம்மை குறிப்பிடும் கதாபாத்திரங்களாக கூட இருக்க வாய்ப்புள்ளது.அந்த வகையில் எனக்கு ஞயாபகம் இருக்கும் சில திரைப்படங்கள் மெர்சல், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, உன்னை நினைத்து ஆகும். இப்படி பல படங்கள் இருந்தும் அதன் ரீல் ஹீரோக்களை மட்டும் பார்த்த நாம் இதுவரை ரியல் லைப் ஹீரோக்களை பார்த்துண்டா? அப்படி பார்த்ததில்லை என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். வாருங்கள் அவர்களை பார்த்துவிடுவோம்!!

மெர்சல் – 5 ரூவா டாக்டர்

மருத்துவ துறையில் நடக்கும் ஊழல்களை எடுத்துரைக்கும் இப்படத்தில் 5 ரூவா டாக்டர் என்ற கதாபாத்திரத்தை நடிகர் விஜய் அவர்கள் நடித்திருப்பார். இது போல் மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவர்கள் இப்போவும் இருக்கிறார்களா என்று கேட்டால் கண்டிபாக இருக்கிறார்கள். உண்மையான 5 ருவை டாக்டர் வட சென்னையில் மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்துள்ளார். 5 ருவை டாக்டர் திருவேங்கடம் சமீபத்தில் மாரடைப்பால் காலமானது வருத்தத்திற்குரியது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – பிரேம் குமார்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் வருவது உண்மையில் பிரேம் குமார் என்பவர் தன் திருமணத்திற்கு முன் கிரிக்கெட் விளையாடி பழசை மறந்தார். அந்த திரைப்படத்தில் வருவது போல் நண்பர்கள் சேர்ந்து இந்த விசியம் யாருக்கும் தெரியாமல் பழசை மறந்த நண்பனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

தீரன் அதிகாரம் ஒன்று – காவலர்

நடிகர் கார்த்தி அவர்கள் அந்த படத்தில் வட மாநில திருடர்களை சிறு சிறு துப்புகளை வைத்து புடிப்பார். இப்படி எல்லாம் பிடிக்க சாத்தியமே இல்லை என்று நினைத்தாலும் அது உண்மையில் தமிழ்நாடு காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இடம் பெரும் முக்கால் வாசி காட்சிகள் உண்மை சம்பவத்தை கருத்தில் கொண்டு எடுத்தது தான்.

உன்னை நினைத்து – மெய் மெய்யப்பன்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதும் குறிப்பாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்களுக்கு கீழ்க்கண்ட புகைப்படத்தில் உள்ளவரை தெரியாமல் இருக்க வாய்ப்பே கிடையாது. ஜோசியத்தில் சகல வித்தைகளையும் கற்று தேர்ந்த இவர் சமீபத்தில் பெங்களூரு பஞ்சாப் அணியுடன் ஆடுவதற்கு முன்னாள் தேவ் படிக்கல் நல்ல ரன் அடிப்பார் எனவும் விராட் கோலி கேட்சுகள் நன்றாக பிடிப்பார் எனவும் கணித்திருப்பர். ஆனால் அங்கு நடந்தது எதிர்மறையாக படிக்கல் ஒரு ரன்யிலும் கோலி இரண்டு கேட்சுகளையும் விட்டிருப்பார் அந்த ஆட்டத்தில். உன்னை நினைத்து திரைப்படத்தில் மெய் மெய்யப்பன் போல் இவர் நிஜத்தில் மெய் மெய்யப்பன்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.