இந்த மனிதரை இறுதிச்சடங்குக்காக தேவாலயத்திற்குள் அனுமதிக்கவில்லையாம்: பின்னணியில் ஒரு சுவாரஸ்ய காரணம்

0 126

ட்ரினிடாட் நாட்டில் ஒருவரை இறுதிச்சடங்குக்காக தேவாலயத்திற்குள் அனுமதிக்கவில்லையாம்.யாருடைய இறுதிச்சடங்குக்காக? அவருடைய இறுதிச்சடங்குக்காகத்தான்! இது என்ன வேடிக்கை என்கிறீர்களா? ஆம், இது ஒரு சுவாரஸ்ய சம்பவம்.இங்கே இளஞ்சிவப்பு சட்டையும், வெள்ளை நிற முழுக்கால்சட்டையும் அணிந்து நாற்காலியில் அம்ர்ந்திருப்பவர் பெயர் Che Lewis (29).உண்மையில் அவர் உயிருடன் இல்லை, ஆச்சரியமாக உள்ளது அல்லவா? ஆம், தற்போது extreme embalming என்ற ஒரு விடயம் ட்ரெண்டிங் ஆகிவருகிறதாம்.அதாவது இறந்தவர் எந்த நிலையில் இருக்கவேண்டுமோ அந்த நிலையில் அவரை உட்காரவோ, படுக்கவோ வைத்துவிட்டு, அவரது உடலுக்குள் ஒரு ரசாயனத்தை செலுத்துவார்கள். அந்த ரசாயனம் இறுகி, இறந்த உடலை அப்படியே இறுக்கமாக வைத்துக்கொள்ளும்.

அப்படித்தான் Lewisஇன் உடலும் உட்காரவைக்கப்பட்ட நிலையில் பதப்படுத்தப்பட்டது.உயிருடன் இருப்பதுபோலவே தத்ரூபமாக நாற்காலியில் அமரவைக்கப்பட்டிருந்த Lewisஇன் உடலை, இறுதிச்சடங்குக்கு வந்தவர் என்று எண்ணி, சிலர் அவரிடம் போய் என்ன ஒரு மாஸ்க் கூட போடாமல் அமர்ந்திருக்கிறீர்கள் என்று கேட்ட வேடிக்கையும் நிகழ்ந்ததாம்.

ஆகவேதான் அவரது உடலை இறுதிச்சடங்குக்காக தேவாலயத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாம்.Che Lewis மற்றும் அவரது தந்தை இருவரும், சென்றமாதம் 25ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.அதில் மகன் Lewis உடலுக்கு வித்தியாசமாக இறுதிச்சடங்கு செய்ய அவரது குடும்பத்தினர் முடிவெடுத்ததால்தான் இவ்வளவு குழப்பமும்.

இதற்கிடையில், இறந்த உடலை இப்படியெல்லாம் நடத்துவது தவறு என பாதிரியார்கள் ஒரு பக்கம் கூற, இறந்த உடலை இப்படி ஆபத்தான முறையில் கொண்டுசெல்வது குற்றம் என பொலிசார் ஒருபக்கம் விசாரணையைத் துவக்கியிருக்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.