திமிங்கலத்தின் வாந்திக்கு இவ்வளவு மவுசா? ஒரேநாளில் கோடீஸ்வரன் ஆன ஏழை மீனவன்..!

0 444

கடற்கரையில் சும்மா நடந்து சென்று கொண்டிருந்த மீனவர் ஒருவர் திமிங்கலத்தின் வாந்தியால் கோடீஸ்வரராகப் போகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நடந்திருக்கிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்…தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் நரீஸ் சுவன்னசங். இவர் கடற்கரையில் நடந்து போய்க்கொண்டு இருக்கும்போது, மஞ்சள் நிறத்தில் மெழுகுபோல் ஏதோ கிடைத்தது.அதைப் பார்த்ததும் அதை ஏதோ ஒரு பொருள் என தனது உறவினர் ஒருவரின் மூலம் எடுத்துக்கொண்டார். அவர் இதைக்காட்டி சில நண்பர்களிடம் விசாரித்தபோதுதான் அது, திமிங்கலத்தின் வாந்தி எனத் தெரியவந்தது. அந்தக் கட்டி போன்று இருந்த அந்தப்பொருள் சுமார் 100 கிலோ எடை இருந்தது. இந்த கட்டியின் மதிப்பு 2.4 மில்லியன் அளவுக்கு விலை போகியுள்ளது.

இது என்ன திமிங்கலத்தின் வாந்தி என்பது புதிதாக இருக்கிறது என பார்க்கிறீர்களா? நடுக்கடலில் இருக்கும் திமிங்கலங்கள் சிலநேரம் அரிதான மீன்களை சாப்பிடுமாம். அவை செமிக்காமல் திமிங்கலத்தின் குடலிலேயே தங்கிவிடும். கொஞ்சநாளில் அது ஒரு பெரிய பந்து போன்று உருவாகிவிடும். இதை வெகுநாள்களுக்கு பின்னர் திமிங்கலம் வாந்தியாக வெளியில் தள்ளுமாம். இந்த வாந்தி மெழுகு பந்து போன்று இருக்கும். இதை விஞ்ஞானிகள் ambergris என்கிறார்கள்.

இது வாசனை திரவியங்கள் செய்ய பயன்படுமாம். இதன் விலையும் இதனால் உச்சத்தில் இருக்கும். இவர் மீனவர் என்பதால் இதுபற்றி அவருக்கு தெரிந்து இருந்ததாம். அண்மையில் தாய்லாந்தில் இதேபோல் ஒரு மீனவருக்கு கிடைத்தது. அதன் மதிப்பு 80 ஆயிரம் பவுண்ட் ஆம்…அதாவது இந்தியப் பணத்தில் 1,85,29,783 ரூபாய்!

கடந்த 2016ல் 1.5 கிலோ எடைகொண்ட திமிங்கல வாந்தி 50 ஆயிரம் பவுண்ட்க்கு விலைபோனது குறிப்பிடத்தக்கது. அடேங்கப்பா திமிங்கல வாந்திக்கு இவ்வளவு மவுசா என நெட்டிசன்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.