காதல் திரைப்படத்தில் நடித்த இந்த சுட்டிக் குழந்தையா இவ்வளவு பெருசு வளந்துருச்சு? சினிமா வாய்ப்புகளின்றி தவிக்கும் அருண் குமார்!

0 364

காதல் தோல்வி என்றாலே அன்று முதல் இன்று வரை நம் மனதிற்குள் முதலில் தொன்றும் திரைப்படம் காதல். காதலிப்பவர்களின் மனதில் ஒரு வித அச்சத்தை உண்டாக்கும் வகையில் அமைந்த இத்திரைப்படம் கலைஞர்கள் பலருக்கும் வாய்ப்பளித்தது. அந்த வாய்ப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானவர் அருண் குமார்.கதாநாயகனாக நடித்த பரத் இப்படத்தில் மெக்கானிக் ஷாப் ஒன்றை நடத்திவருவார் அதில் பாரத்திற்கு உதவியாக அருண் குமார் நடித்திருப்பார். ஒரு வகையில் படத்தின் முழுநேர காமெடியனும் இவர் தான். இவர் கூல் ட்ரிங்க்சில் மூத்திரத்தை கலந்து பாரத்தின் நண்பன் சுகுமாரிடம் கொடுப்பது அனைவர்க்கும் பிடித்தமான காமெடி.

இப்படி பல காமெடியகளில் கலக்கிய அருண் குமார் காதல் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி திரிஷா நடித்த உனக்கும் எனக்கும் அதன் பின் மூன்று வருட கேப்பிற்கு பின் காதல்னா சும்மா இல்லை என்ற படத்திலும் குணச்சித்திர நடிகராக தோற்றமளித்தார். அதனை தொடர்ந்து ஏலமாரி என்ற திரைப்படத்தில் மெயின் காமெடியனாக நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

அதனால் சினிமாவை விட்டு ஓரங்கட்டிய அருண் குமார் தற்பொழுது தன் சொந்த ஊரான தூத்துக்குடியில் சுய தொழில் ஒன்றை செய்து பிழைத்து வருகிறார். இவரது புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது அதில் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக! காதல் திரைப்படத்தில் நடித்த மற்றொரு காமெடியன் சுகுமார் இன்னமும் சினிமாவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.