பட்டையை கிளப்பிய கேரள தம்பதி! ஊழியர்களை போலவே மாற்றிய போட்டோ ஷூட் : மில்லியன் கணக்கில் குவியும் வாழ்த்து

0 247

கேரளாவை சேர்ந்த புதுமண தம்பதிகள் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்று உள்ளனர்.வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் திருமணமும் ஒன்று.அத்தகைய திருமணத்தின் மறக்கமுடியாத தருணத்தை புகைப்படம் எடுத்து வைத்து காலந்தோறும் கண்டு மகிழ யாருக்குத்தான் விருப்பம் இருக்காது.அப்படித்தான் சமீப காலங்களில் திருமணத்துக்கு முன்பு என கூறப்படும் ப்ரீவெட்டிங் போட்டோக்களை திருமண தம்பதிகள் எடுத்து வருகின்றனர்இந்த நிலையில் கேரளாவில் அண்மையில் கிளாமராகவும் மாடர்னாகவும் ப்ரீவெட்டிங் போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.ஆனால் அதற்கு மாற்றாக செய்யும் தொழிலுக்கு மரியாதை செய்யும் வகையில் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், அண்மையில் எடுத்துள்ள ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் வைரல் ஆகியுள்ளது.அந்த காலத்தில் திருமணத்திற்காக பத்திரிக்கை அடித்து பந்தக்கால் நட்டு பல உறவுகளை அழைத்து சொந்தங்கள் கூடி திருமணம் செய்யும் உறவுகள் மத்தியில் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். அந்த புகைப்படத்தை தன் பிள்ளைகள் பேத்திகள் அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த திருமண நாளில் நடந்த சந்தோஷங்களை நினைவுபடுத்த இந்த புகைப்படம் உள்ளது.

இந்த காலத்தில் உள்ள புதுமணத் தம்பதியர்கள் நாம் விவசாயத்தையும் கட்டிட தொழில் போன்ற கூலி வேலை செய்பவர்களை ஏளனமாக நினைக்கும் மக்களிடையே இந்த புகைப்படம் ஒரு வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது பல லட்சங்கள் செலவு செய்து ஆயிரக்கணக்கில் செலவு செய்து மணப் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் அலங்காரம் செய்து போட்டோ எடுக்கும் இந்த காலத்தில் கூலி வேலை செய்பவர்களும் அவர்களை மதிக்கும் அளவிற்கு இந்த புதுமண தம்பதியினர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து எடுக்கும் புகைப்படம் எவ்வளவு அழகோ அதைவிட கூலி வேலை செய்யும் அவர்களின் உழைப்பு அதை விட அழகு தான் இந்த புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்திருமண தம்பதிகள் கட்டிடம் கட்டும் கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்களை போன்று காட்சி தருகின்றனர்.இந்த போட்டோ ஷூட் சமூக ஊடகங்களில் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.