சூரரைப் போற்று படத்தில் விமான டிக்கெட் 1 ரூபாய்… நிஜத்தில் இன்று ஏர் டெக்கான் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

0 680

சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் வருகிறார்கள்.அந்த நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று’ திரைப்படமும் சாதனை படைத்த இந்தியர் ஒருவரின் வாழ்கை சம்பவம் தான்.இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும். இந்த படத்தை பார்த்துவிட்டு கோபிநாத், சூர்யா மற்றும் படத்தின் இயக்குனரை கூட பாராட்டி இருந்தார்.

பல வருடங்கள் போராட்டத்துக்குப் பிறகு கோபிநாத் அவர்கள் 2003 ஆம் ஆண்டு “ஏர் டெக்கான்” என்ற விமான நிறுவனத்தை தொடங்கினார்.தற்போது 34க்கும் மேற்பட்ட பாதைகளில் விமானங்களை இயக்கி உயர்ந்துள்ளார். இந்த விமானங்கள் எல்லாம் பெரும்பாலும் வட மாநிலங்களில் தான் இயங்கி வருகின்றன.

அரசு அனுமதியுடன் அதிகபட்ச நிர்ணயம் 2500 ரூபாய் மட்டும் தான். 2017 ஆம் ஆண்டு மும்பை நாசிக் நகரங்களுக்கு இடையே இந்த விமானம் இயக்கப்பட்டது.எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த ஏர் டெக்கான் வரும் என்றும் திட்டமிட்டுள்ளார்.

இன்று ஏழைகளுக்கு எட்டா கனியாக இருக்கும் விமானப் பயணம் குறைந்த செலவில் ஏழைகளும் செல்லலாம் என்பதை அடிப்படையாக கொண்டு இவர் இந்நிறுவனத்தினை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று சூரரைப் போற்று படத்தில் விமானத்தில் பறப்பதையே பெருங்கனவாகக் கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் கனவை, ஆசையை நிறைவேற்றும் விதமாக 1000 ரூபாயில் ஏன் 1 ரூபாயில் கூட விமானத்தில் பறக்க முடியும் என்பதை நிரூபிக்க போராடும் படமே இதுவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.