நரை முடியை உடனே அழிக்க பயன்படும் முட்டையின் மஞ்ச கரு மற்றும் எண்ணெய்; இப்படி யூஸ் பண்ணுங்க!

0 224

பொதுவாக முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தவும், கருமையாக்கவும் முட்டையின் வெள்ளை கருவை பலரும் பயன்படுத்துவார்கள்.கூந்தலின் வறட்சியை தடுக்க இவை பெரிதும் உதவுகிறது. மேலும், முட்டையின் மஞ்சள் கருவை கொண்டு எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.இரண்டு விதமான வகையில் இந்த எண்ணெயை வீட்டில் தயாரிக்கலாம். அதை முதலில் தெரிந்துகொள்வோம்தேவைமுட்டை – 3தேங்காய் எண்ணெய் – கால் கப்முட்டையை வேகவைத்து அதன் உள்ளே இருக்கும் மஞ்சள் கருவை மட்டும் வெளியே எடுக்கவும். அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறு கிண்ணத்தில் வைக்கவும்.அதில் சுத்தமான தேங்காயெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். இரண்டும் சேர்ந்ததும் அகலமான பாத்திரத்தில் நீர்விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

அதில் முட்டை தேங்காயெண்ணெய் சேர்த்த இந்த சிறு கிண்ணத்தை வைத்து சூடாக்கவும். முட்டையின் மஞ்சள் கருவும் தேங்காயெண்ணெயும் கலந்து நன்றாக கொதித்ததும் இறக்கி ஆறவிட்டு வடிகட்டிவிடவும்.முட்டையை வேகவைத்து அதன் உள் இருக்கும் மஞ்சள் கருவை எடுத்து அப்படியே வாணலியில் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

அதை நன்றாக கிண்டியபடி இருந்தால் அது கருகும். அப்படியே அவை கருப்பாக ஆகும் வரை கிளறி அதில் ஆலிவ் எண்ணெய் விட்டு இறக்கி ஆறியதும் வடிகட்டி வைக்கவும்.மஞ்சள் கருவிலிருந்து தயாரித்தாலும் இதில் வாடை இருக்காது என்பதால் தயக்கமில்லாமல் பயன்படுத்தலாம்.மேலும், இந்த முட்டை எண்ணெயை அவ்வபோது தயாரித்து பயன்படுத்தலாம். கூந்தலை சிக்கில்லாமல் சீவி பாகமாக பிரித்து இந்த எண்ணெயை தடவி கொள்ள வேண்டும்பிறகு 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு சிகைக்காய் அல்லது ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி எடுக்கலாம்.வாரத்துக்கு இரண்டு முறை இதை பயன்படுத்தினால் பலன் வேகமாக கிடைக்கும். என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். 

You might also like

Leave A Reply

Your email address will not be published.