இத்தனை விஷயத்தை நமது பள்ளிகளால் கற்பிக்க முடியுமா..?

0 79

காட்டுப்பள்ளியில் இரண்டு நாளைக்கு முன்னதாக குட்டிமா (பசு மாடு) காணாமல் போனது. இப்பகுதி முழுவதுமாகத் தேடி கடைசியாக இன்று ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அருகில் இருந்த வேறொருவர் நிலத்தில் இருந்து குட்டிமா மீண்டும் காட்டுப்பள்ளிக்கு அழைத்து வரப்பட்டாள்.

குட்டிமா மீண்டும் வந்த செய்தியைக் கேட்டு இன்று காட்டுப்பள்ளிக்கு வந்த ரித்திக், மாடு காணாமல் போனதற்கான காரணத்தையும், இனி மீண்டும் அது தொலைந்து போகாமல் பாதுகாக்கும் வழிமுறைகளையும் எனக்கு எடுத்துக் கூறிய போது அவன் அறியாமல் எடுக்கப்பட்ட காணொளி!

ஒரு ஆதிவாசிக் குழந்தையினைப் படம்பிடித்து பொதுதளத்தில் பகிர்வது என்னுடைய உளவியலுக்கு முரணான விஷயம் என்றாலும், இதை பதிவு செய்ய வேண்டும் என்று என்னை நான் சமரசப்படுத்திக் கொள்கிறேன்.

ஆதிவாசிக் குழந்தைகளின் பேச்சில் இருக்கும் தெளிவும் அவர்களது சிந்தனைகள் உணர்ச்சிகளோடு சொல்வடிவம் ஆவதும் எனக்கு என்றைக்குமே வியப்பைத் தரும். தனது வாழ்வில் இருந்து அனுபவித்த விஷயங்களை உணர்ச்சியோடு அவன் பகிரும் போது மிகப் பெரிய பிரம்மிப்பை ஏற்படுத்தியது. அவன் மிக அற்புதமாக தாய்மை உணர்வைத் தொடர்பு படுத்திப் பேசியதன் பின்ணணியில் அவனுடைய ஆழமான வாழ்வியல் ஒளிந்துள்ளது.

முகநூல் பகிர்வு

வீடியோ👇👇

https://m.facebook.com/story.php?story_fbid=977337822690001&id=162054467551678

You might also like

Leave A Reply

Your email address will not be published.