ஒரு முறை சிம்பன்சிகள் கூட்டமா இருக்கும் ஒரு இடத்துல கேமரா வெச்சாங்க..

0 642

BBC ல Spy in wild அப்படீன்னு ஒரு நிகழ்ச்சி.. கேமராவ காட்டுக்குள்ள கொண்டுபோய், குறிப்பிட்ட விலங்குகள் அதிகமா வாழும் இடத்துல வெச்சிடுவாங்க ..

சிங்கம், குரங்கு, சிறுத்தை வரிசையில
ஒரு முறை சிம்பன்சிகள் கூட்டமா இருக்கும் ஒரு இடத்துல வெச்சாங்க..

அதுல ஒரு மூத்த சிம்பன்சி..செல்லப்பிராணியா பூனைய வளத்தறத காட்டுனாங்க..அவ்வளவு செல்லமா வளத்துது..அதோட விளையாடுது..சோறுகூட போடுது

காட்டுவிலங்குகளை வீட்டுவிலங்கா மாத்துற கட்டம் மனிதனின் பரிணாம வளர்சியில் முக்கியமான கட்டம்..

காட்டு நாய்களை வீட்டு நாய்களாக.மாற்றியது வேட்டைக்கட்டமாக இருக்கலாம்.

வரையாடுகளை ஆடுகளாகவும்
காட்டு மாடுகளை வீட்டு மாடுகளாகவும், மாற்றியது வேளாண்மைகட்டமாக இருக்கலாம் ..அது அவனுடைய உழைப்பை எளிதாக்கியது. இப்போது ரோபோக்களை, நுட்பமான எந்திரங்களை தங்களின் கட்டளைப்படி நடக்கவும் தனது வேலைகளை நிறைவேற்றவும் செல்லப்பிராணிகள்போல் ஆக்கியதற்கு இவற்றை ஒப்பிடலாம்.

மனிதன் கூட்டுவாழ்வு வாழ்ந்த ஆரம்பகாலங்களில்,நாடோடியாக அலைந்த கட்டத்தில், தனிப்பட்ட ஆசுவாசங்களுக்கு இடமில்லை. ஆகவே செல்லப்பிராணி இருந்திருக்கவாய்ப்பில்லைஎன்று நினைத்துக்கொண்டிருந்தேன்

ஆனா காட்டுப்பூனைய செல்லப்பிராணியா வளர்க்கும் சிம்பன்சியப்பார்த்ததும் சின்ன குழப்பம் வந்துவிட்டது.

பதிவு: லெக்சுமனன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.