வேலுப்பிள்ளை பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் ஏன் இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்..?

0 1,406

சின்ன பாம்பு என்றாலும் விசம் இருக்கும்’- துரோகி கருணா

பாலச்சந்திரனை சுடச்சொன்னது “கருணாவே” 53 Divisen கட்டளை அதிகாரி கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 19.05.2009 அன்று சரியாக 7. 15 மணி காலைவேலையில் 53 Divisan படைகளிடம் சரணடைந்தார் பாலச்சந்திரன். இராணுவத்தின் 4ஆவது விஜயபாகு படைப்பிரிவின், முத்துபண்டாவின் தலைமையில் இருந்த 08 பேர் கொண்ட இராணுவப் படையணியிடம் இவர்கள் சரணடைந்ததாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவரது மெய்க்காவலர் இருவருடன் பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். இவர்களோடு மேலும் மூவர் பாதுகாப்புக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அப்போது அங்கே நின்ற இராணுவத்திற்கு தெரியாது இவர்தான் தலைவர் வே.பிரபாகரனுடைய கடைசி மகன் பாலச்சந்திரன் என்று. அங்கே நின்ற சில துரோகிகளினால் அடையாளம் காட்டப்பட்டு பாலச்சந்திரனை தடுத்து வைத்தனர்.

இதன்போது லெப்டினன் கேர்ணல் அலுவிகார, அவரது 681ஆவது பட்டாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேர்ணல் லலந்த கமமே ஊடாக, 53ஆவது படையணியில் அன்று மேஜர் ஜெனரல் பதவியிலிருந்த கமல் குணரத்னவிற்கு இவ்விடையத்தை அறிவித்துள்ளார்.

அங்கு இருந்த கமல் குணரத்னவின் உத்தரவிற்கமைய, பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரை நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து கமல் குணரத்ன இருக்கும் இடத்திற்க்கு அழைத்துச் சென்றுள்ளனர். கமல் குணரத்ன பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரிடம் சிறப்பு விசாரணைகளை நடத்தியுள்ளார்.

பின்னர் பாலச்சந்திரனிடம் பெறப்பட்ட தகவல்களை கமல் குணரத்ன உடனடியாக பாதுகாப்புச் செயலாளருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.

பின்னர் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவிடம் இவ்விடையம் சம்பந்தமாக தெரித்தபோது சரத்பொன்சேக துரோகி கருணாவிடம் தெரிவித்தார். கருணா அப்போது சரத்பொன்சேகாவிடம் ஒன்றும் தெரிவிக்காமல் நேரடியாக கமல் குணரத்னவை தொடர்பு கொண்டு தெரிவித்த விடையம் “சின்ன பாம்பு என்றாலும் எதிர்காலத்தில் விசம் பெரிதாகியே இருக்கும் .

இங்கே அனுப்பாதீர்கள் அங்கேயே புதைத்து விடுங்கள்” என்பதாகும். கருணா இவ்வாறு கூறக் காரணம் , அவன் வே.பிரபாகரன் அவர்களிடம் இருந்து பிரிந்து சென்று சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து கொண்ட ஒரு தளபதியாவான்.

அந்த கட்டளை கிடைக்கும் வரைக்கும் காத்திருந்த குணரத்னவும் சிப்பாய்களும் பாலச்சந்திரனுக்கு மாச்சில்லு (பிஷ்கேட்) கொடுத்து சாப்பிடும்படி அமர்த்தி வைத்ததிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. தன்னைவிடமாட்டார்கள் என்று தெரிந்த பாலச்சந்திரன் தன்னை எதிரி சுடப்போகின்றான் என்றும் தெரியும். அடுத்த ஒரு சில நொடிகளில் அப்பாலகன் உடம்பில் 5 சன்னங்கள் (bullet) பாய்ந்தன.

விழியம் நன்றி :reporter (மலையாள தொ.கா)

இவருடன் சேர்த்து இவரின் மெய்க்காவலர்கள் 5 பேரும் அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

உசாத்துணைகள்:

விம்பகங்கள்(image)

கூகிள்

விழியங்கள்

சேனல் 4 – இங்கிலாந்து

மேற்கண்ட ஏனைய தகவல்கள் அனைத்தும் கமால் குணரத்ன என்ற இலங்கை இராணுவத் தளபதி எழுதிய ‘நந்திக்கடலுக்கான ஒரு வழி’ என்னும் புத்தகதில் இருந்து எடுக்கப்பட்டவை.

தொகுப்பு & வெளியீடு:நன்னிச் சோழன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.