உங்களை பாராட்டிய நானுமே இதை பகிர கடமை பட்டுள்ளோன், பெண்ணியவாதிகளே வாருங்கள்..!

0 836

மூன்று தேவிகள்
———————————-
சகோதரிகள்
பனிமலர்,Panimalar Panneerselvam
திவ்யபாரதி Divya Bharathi
மருத்துவர் ஷாலினிShalini..

இந்த மூன்று பேரின் பதிவுகளை பார்க்க நேர்ந்தது. ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது.

சகோதரி Panimalar Panneerselvam.

என்ன சொல்ல வருகிறீர்கள் என தெரியவில்லை. ஆனால் சீமானை ஏதோ சொல்கிறீர்கள் என புரிந்துகொள்ள முடிகிறது. உழைக்கும் மக்களான மீனவ சமூகத்தில் இருந்து ஒரு பெண் அரசியலுக்கு வருவதும், அவர்களுக்கு வேட்பாளர் உரிமை கிடைப்பதும் சாதாரண ஒன்றல்ல. பெரியார் இருந்திருந்தால் இந்த செயலை வரவேற்று அறிக்கை கொடுத்திருப்பார. (பெரியாரின் கொள்கையை நிறைவேற்றும்படி யாரெல்லம் அதிகாரத்திற்கு வருகிறார்களோ, அவர்களை எல்லாம் ஆதரிப்பேன் என்று அவரே கூறியிருக்கிறார்-என்பதை பனிமலரும் பதிவிட்டிருக்கின்றார்.) பெரியார் கொள்கையைப் படித்த உங்களுக்கு அந்த வரவேற்கும் பன்பு இல்லாமல் போவதேன் என் தெரியவில்லை. இதற்குதான் ‘போலி திராவிடம்’ என்று கூறுகிறோம். பொய்யான கட்டமைப்பை நீங்கேளே உடைத்துக்கொண்டு வருகிறீர்கள். நல்லது.

Divya Bharathi சகோதரிக்கு கேட்க விரும்புவது, ”நீங்கள் சொல்லும் அம்பேத்காரிய,பெரியாரிய, மார்க்ஸிய கொள்ளையை தூக்கிப் பிடித்திருக்கும் கட்சிகள், அமைப்புகள் ஏதும், பெண்களுக்கு சரிபாதி இடங்களைக் கொடுக்காதது ஏன்? என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். அதுவல்லவா புரட்சி. மேற்சொன்ன ‘இயங்கள்’ எல்லாம் அப்படிச் செய்திருந்தால் இன்று தென்னாட்டு பால்தாக்ரேவாக சீமான் வந்திருக்க வேண்டிய அவசியமில்லையே சகோதரி.

மூன்றாவது மனநல மருத்துவர் Shalini-க்கு.

உங்களுக்கு ஒரே கேள்விதான். “டாக்டர் முத்துலட்சுமி தொடங்கி, சுப்புலட்சுமி ஜெகதீசன் வரை,முன்னாளில் மணியம்மை தொடங்கி, இப்போது சகோதிரிகள் கனிமொழி, தமிழச்சி, முகநூலில் எழுதிக்கொண்டிருக்கும் பனிமலர், திவ்யபாரதி எல்லாம், எந்த ஆண்களின் பேச்சில் மயங்கி பொது வாழ்க்கைக்கு வந்தார்கள் என்பதை கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கள். அவர்களின் பொதுவாழ்க்கை-மக்கள் சேவைக்கான காரணத்தை கொச்சைப்படுத்துகிறீர்கள்.

அல்லது, ‘நாங்கள் இந்த ஆண்களின் பேச்சில் மயங்கிதான், இப்படியான பொதுவாழ்க்கைக்கு வருகின்றோம்’ என்று பனிமலரும்- திவ்யா சகோதரிகளாகவது சொல்லட்டுமே..

அல்லாமல் நீங்கள் மட்டுமே அப்படி சொல்லிக்கொண்டிருப்பீர்களேயானால் உங்களுக்குத்தான் ஏதோ மனநல பிரச்சனை. உங்களுக்குத்தான் வைத்தியம் தேவை.

மயக்கத்திற்கான ஒரு அர்த்தத்தை விளக்கமாக கூறினாலும், தன்நெஞ்சறியும்-பொய்யற்க…

— பகிர்வு

இதற்கு பதில் அளிக்க முடியாமல் இது சைமனுக்கான முட்டு என்றால் உங்களை எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது என்பதே நிதர்சனம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.