எந்த பெண்ணையும் வீட்டில் இருந்து கடத்திச்சென்று சீரழிக்கவில்லை. உடனே பெண்ணை அசிங்கபடுத்திட்டான்னு வராதீங்க

0 602

முதலில் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். பொள்ளாச்சி நடைப்பெற்ற கெட்ட நிகழ்வுக்கு உரிய ஆண்கள் மனிதர்கள் அல்ல, அவர்கள் மனிதத்தன்மையை இழந்து பல ஆண்டுகள் ஆகின்றது. ஒரு பெண்னை துன்புறுத்தி இன்பம் காண்கிறார்கள் என்றால், அவர்கள் மனிதர்களே இல்லை.

இவ்வுலத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைப்பவள் பெண். இதற்கு துணையாக இருப்பவன் ஆண். படைக்கும் தொழில் நிறுத்தப்பட்டால் வருங்காலம் எவருக்குமில்லை, உயிரைப் படைக்கும் பெண்ணின் மீது மோகப்பார்வையை வீசி சீரழிக்க எப்படி மனம் வந்தது அவர்களுக்கு? வீட்டில் அக்கா, தங்கையுடன் பிறந்தும் அவர்கள் இப்படி செய்தார்கள் என்றால், நாம் எவ்வாறு அவர்களை அழைப்பது?

இதில் அவர்கள் குற்றம் மட்டும் இல்லை, பெண்களும் குற்றம் செய்துள்ளனர். நான் பொள்ளாச்சி நடந்தவற்றை கேட்ட பிறகு. அதைப்பற்றி செய்திகளை இன்றுவரை கவனித்துவருகிறேன். இதனால் நான் பல சேதிகளை அறிந்துகொண்டேன். அவர்கள் பெண்களை ஆராய்ந்து தான் தேர்ந்தெடுத்துள்ளனர். எந்த பெண்ணையும் வீட்டில் இருந்து கடத்திச்சென்று சீரழிக்கவில்லை.

பணம், அழகு, போன்றவற்றை மிகுதியாக விரும்பும் பெண்களையும், ஓரினச்சேர்க்கையில் நாட்டமுள்ள பெண்களையே அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இது பெண்களுக்கு ஒரு பெரிய பாடம். எந்த தகவலும் அறியாமல், தேடலுக்கு உட்படுத்தாமல், வாழ்க்கையின் துய்ப்புகளை உணராமல். எடுத்த தீர்மானமே! அவர்களின் வாழ்க்கையை தீர்த்துவிட்டது.

அறிவு வளர்க்கும் காலத்தில் காதலை வளர்த்தது தவறு. இதற்கு உடந்தை பெற்றோர்களும், இந்த நாடும் தான். காரணம், பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்திருக்கவேண்டும். காதலுக்கும், காமத்திற்கும் வேறுபாடு அறியாத வயதில் அவர்களை கட்டுக்குள் வைத்திருக்காதே பெற்றோரின் குற்றம். குறிப்பிட்ட வயதில் எது சரி? எது தவறு? என்பதை எடுத்துரைத்திருக்கவேண்டும்.

நாடு, இந்த நாடு உணர்வுகளை அறியும் வயதில் உள்ள பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டலுக்குரிய பாடங்களை எடுத்திருக்கவேண்டும். எது பெண்மை?, எது ஆண்மை? என்பதை புரியவைக்க முயலவேண்டும். இந்த வயதில் எது செய்யலாம்? ,எது செய்யக்கூடாது? என்பதை விளக்கவேண்டும்.

அடுத்து, வெளிநாட்டுப் பழக்கவழக்கங்களை உள்வாங்கியது எமது மக்களின் தவறு, பட்டப்பகலில், வெட்ட வெளியில், பலர் முன்னிலையில் கட்டியணைத்து முத்தமிடும் பழக்கம் இன்றைய தலைமுறையிடம் உண்டு. இதை பார்க்கும் அடுத்த தலைமுறையினர் இன்னும் ஒரு படி மேலே சென்று வேறு ஏதாவது செய்யப் பார்ப்பார்கள்.

ஆண், பெண் இவ்விருவருக்கும் இடையில் உணர்வுகள் துளிர்விடுவது இயற்கை. இந்த இயற்கையின் சட்டத்துக்குள்ளும் சில ஓட்டைகள் உள்ளன. இதில் தப்பிப்பதற்கு பலர் முயற்சிக்கிறார்கள். இயற்கைக்கு எதிராக செயற்கையை நாடினால் இயற்கையின் தண்டனையில் இருந்து யாராலும் தப்பிக்கமுடியாது.

இறுதியாக,

பெண்களுக்கும், ஆண்களுக்கும் சேர்த்தே சொல்லுகிறேன்.

யாரும் இந்த புலனம், முகநூல் இந்த இணைய உலகம் மூலம் காதலில் விழுந்துவிடவேண்டாம்.

எவரேனும் உங்கள் இசைவின்றி தொடமுயன்றால் சினப்பட கற்றுக்கொள்ளுங்கள்.

காதலனோ, காதலியோ திருமணத்திற்கு முன்னர் உங்கள் இச்சைகளை தீர்த்துக்கொள்ள முயலவேண்டாம்.

நீங்கள் யாரையும் நம்பி உங்கள் தனிப்பட்ட கருத்துகளை, சொல்லக்கூடாத கருத்துக்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.

உடல், மனம் சார்ந்த சிக்கலுக்கு உங்கள் பெற்றோர் அல்லது மருத்துவர்களை நாடுங்கள். மாறாக இவ்வாறான இணையநண்பர்களிடம் பகிரவேண்டாம்.

சரி, காதலில் விழுந்துவிட்டீர்கள் என்றால், உங்கள் துணையை ஆய்வுக்கு உட்படுத்துங்கள், உங்களை எதற்காக நாடுகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். “என்னை நம்பமாட்டியா?, நான்தானே உனக்கு எல்லாம்” என்ற சொல்லாடலை ஏற்காதீர் எதுவாயினும், திருமணத்திற்கு பிறகு என்று உறுதியாக நில்லுங்கள்.

ஆண்களோ, பெண்களோ நீங்கள் ஒருவரை ஏமாற்றபோகிறீர்கள் என்றால், நீங்கள் ஒருவரை மட்டும் ஏமாற்றப்போவது இல்லை. இருவரை ஏமாற்றப்போகிறீர்கள். ஒன்று உங்கள் இன்றைய துணை மற்றும் ஒன்று, உங்கள் நாளை துணை. நீங்கள் ஏமாந்தாலும், ஏமாற்றினாலும் இரண்டுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள்.

என்றும் உண்மையான காதல் ஏமாற்றாது, கொலை செய்யாது. ஆனால், காமக்காதல் கண்ணை மறைப்பதால் கொலையும் செய்யும், ஏமாற்றவும் செய்யும்.

எப்பொழுதும் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் நன்றி.

பதில்: தமிழ்மறவன்

இதுவே உங்களின் கருத்தும் என்றால் பகிருங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.